அடிக்கடி போட்டு போரடித்த பிளெய்ன் டாப்ஸ்களுக்கு ஃப்ரெஷ் லுக் கொடுக்கணுமா..? பேஷன் டிசைனர் நிரஞ்சனி சுந்தர் தரும் டிரெண்டி டிப்ஸ் உங்களுக்காக...
1. டிப்டு ஹெம் ட்யூனிக் டாப்
2. பழைய புடவைகளில் இருக்கும் ஜரி பார்டரை விரும்பிய வடிவில் கட் செய்து கொள்ளவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
3 ஜரி பார்டரை பாக்கெட்டாக வைத்து தைத்தால், அழகிய டாப்ஸ் ரெடி (ஜரிகையை விரும்பிய வடிவில் கட் செய்து கழுத்துப் பகுதியின் கீழ் டிசைனாகவும் வைத்து தைத்துக்கொள்ளலாம்.)

1. போட் நெக் ட்யூனிக் டாப்
2. க்ரோஷா பூக்கள் ( ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்).
3. டாப்ஸின் கழுத்து பகுதியிலோ அல்லது விரும்பிய இடங்களி்லோ க்ரோஷா பூக்களை வைத்து தைத்துக் கொள்ளவும்.
4. அழகான டாப்ஸ் ரெடி. இது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் காட்டன் ஸ்கர்ட்டுக்கும் பொருத்தமாக இருக்கும்.

1. சைனீஸ் காலர் வைத்த க்ராப்டு டாப்.
2. சில்க் காட்டன் துணி. தேங்காய் ஓட்டினால் செய்யப்பட்ட பட்டன்கள்.
3. சில்க் காட்டன் துணியை சிறு சிறு வட்டங்களாக வெட்டி அதன் நடுவே, பட்டனை வைத்து, டாப்ஸின் மேல் ஆங்காங்கே வைத்து தைத்தால் பியூட்டிஃபுல் டாப்ஸ் ரெடி.
