Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

Published:Updated:

இந்தியா-பாக்... அடித்த நோபல் பரிசு!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

2014ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசினை பாகிஸ்தானிய சிறார் கல்விச் செயற்பாட்டாளர் மலாலா யூஸஃப்சாய் மற்றும் இந்திய சிறார் உரிமைச் செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் பெற்றுள்ளனர். 17 வயது மலாலா, மிகவும் சிறிய வயதில் நோபல் வென்றவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக குரல் கொடுப்பவரான மலாலா, 2012- ம் ஆண்டு அக்டோபரில் தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்டதால் உலகம் முழுக்க பரபரப்பானார். குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறை மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியமைக்காக இம்முறை அமைதிக்கான நோபல் பரிசை மலாலாவுக்கும் வழங்குவதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவுக்கு அமைதிக்காக கிடைக்கும் இரண்டாவது நோபல் பரிசு இது. இதற்கு முன்பு அன்னை தெரசாவுக்குக் கிடைத்தது. பாகிஸ்தானுக்கு அமைதிக்காக கிடைக்கும் முதல் பரிசு இது என்பது குறிப்பிடத்தக்கது.

'என்னுடைய நோக்கம், இப்போதுதான் முதல் அடியில் உள்ளது. அதற்குள் இந்த விருது வாங்கும் அளவுக்கு நான் ஒன்றும் செய்துவிடவில்லை' என்று சொல்லியிருக்கும் மலாலா, இந்த விருதை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

பார்பி மேரி!

லகிலேயே அதிக விற்பனையாகும் பொம்மைகள், பார்பி பொம்மைகள். விலையுயர்ந்த இந்தப் பொம்மை மீது பெண் குழந்தைகளுக்கு அப்படி ஒரு பிரியம். இந்த பார்பி தீம்களில் நம்மூர் காத்ரீனா கைஃப் மாடலாக போஸ் கொடுத்தது நாமறிந்ததே. தற்போது இந்த பார்பி தீம்களில் உருவாகியிருப்பவர், மேரி மாதா. அர்ஜென்டினா நகரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த மேரியம்மா பார்பி பொம்மைகளுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, கடவுளை விளையாட்டுப் பொருளாக்கி லாபம் பார்ப்பதாக வழக்கும் தொடுத்துள்ளனர். என்றாலும், அறிவித்த சில நாட்களில் மேரியம்மா பார்பி பொம்மைகள் அனைத்தும் புக்காகிவிட்டன.  

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ... பார்பி டீம்?!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

வேட்டிய மடிச்சு கட்டுங்க கேர்ள்ஸ்!

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில், ’பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது' என்று திரைப்பட பின்னணி பாடகர் யேசுதாஸ் வாய் திறந்து வம்பில் சிக்கிக்கொண்டிருக்கிறார். ’மதிப்புமிக்க ஒரு பாடகர், இவ்வாறா பேசுவது?' என்று நாடு முழுக்கவே அவருக்கு பெண்கள் பலரும் எதிர்ப்பு காட்டிவருகின்றனர். இந்நிலையில், கேரள பெண்கள் சிலரே தக்க பதிலடி கொடுத்துள்ளனர். வேட்டி அணிந்து, அதை மடித்துக்கட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர் அந்த பெண்கள்.

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

முதல் ஒலி!

ஸ்திரேலியாவைச் சேர்ந்த லாச்லன் என்ற குழந்தைக்கு பிறவியிலேயே கேட்கும் திறன் இல்லை. பிறந்து ஏழு வாரங்கள் ஆகியிருந்த நிலையில், காது கேட்கும் கருவியை அவள் பெற்றோர் பொருத்த, முதன்முறையாக ஒலியை உணர்ந்த அந்த மொட்டு கண்கள் விரித்து, சுருக்கி என தன் முகத்தில் அந்த ஆச்சர்ய உணர்வுகளை வெளிப்படுத்த, சந்தோஷத்தின் உச்சத்தில் அழுதேவிட்டனர் பெற்றோர். இதை  வீடியோவாக எடுத்திருந்த அந்த பெற்றோர், இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ’யூடியூப்'பில் பகிர்ந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் ஒரு  கோடிக்கும்  மேற்பட்டோர் இந்த வீடியோவை ’க்ளிக்'கியுள்ளனர். 2 வயதாகும் லாச்லனே, அந்த வீடியோவில் தன்னைப் பார்த்து குஷியாகிறாராம்.

லவ் யூ லாச்லன்!

நீங்களும் பார்க்க: https://www.youtube.com/watch?v=UUP02yTKWWo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism