Published:Updated:

``என் நட்பால் கெட்ட பெயர்... போலீஸார் கெடுபிடி... பிருந்தா அம்மாவின் பதிலடி..!"- பகிரும் குஷ்பு

கு.ஆனந்தராஜ்

```குஷ்புகூட இனியும் நட்பு வெச்சு சுத்தினா, நிச்சயம் உங்க பொண்ணு பேரு கெட்டுடும்'னு பிருந்தா அம்மாகிட்ட பலரும் சொல்லி உசுப்பேத்தியிருக்காங்க''

தன் தோழிகளுடன் குஷ்பு
தன் தோழிகளுடன் குஷ்பு

நடிகை குஷ்பு, குடும்பத்துக்கு இணையாக தன் நண்பர்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார். அவரின் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே திரைத்துறையைச் சார்ந்தவர்கள்தான். நண்பர்கள் தினத்தையொட்டி, தன் நண்பர்கள் குறித்துப் பேசுகிறார், குஷ்பு.

தன் நண்பர்களுடன் குஷ்பு
தன் நண்பர்களுடன் குஷ்பு

``நடிப்பைத் தாண்டிய என் உலகம் நண்பர்கள்தான். 1986-ம் ஆண்டு முதல் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா என் நெருங்கிய தோழி. பிறகு, அனு பார்த்தசாரதி, சுஜாதா விஜயகுமார், சுப்பு பஞ்சுனு மிகச் சிறந்த நண்பர்கள் எனக்குக் கிடைச்சாங்க. நாங்க ஐவரும் நெருங்கிய நண்பர்கள். சினிமா முதல் குடும்பம் வரை நாங்க வெளிப்படையா எல்லா விஷயங்கள் குறித்தும் பேசுவோம். நான் சினிமாவில் பிஸியா நடிச்சுகிட்டிருந்தபோது, ஓய்வு நேரங்களை என் நண்பர்களுடன்தான் செலவிடுவேன். நாங்க ஐவரும் ஒண்ணா சேர்ந்தா, ரொம்பவே லோக்கலா பேசிப்போம்.

எங்களின் நல்லது, கெட்டது சார்ந்த எல்லா விஷயத்திலும் மற்ற நால்வரின் சப்போர்ட் நிச்சயம் இருக்கும். ஒருமுறை கற்பு குறித்து நான் பேசியதை, சிலர் பெரிய பிரச்னையா மாத்தினாங்க. அந்தச் சூழலில் நான் பயப்படலை. அந்த விவகாரத்தை தைரியமா எதிர்கொண்டேன். அப்போ நான் பாதுகாப்பான இடத்துல தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுச்சு. அந்த இடம் என் கணவர் மற்றும் என் நாலு நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். 

குஷ்பு
குஷ்பு

இந்த விஷயத்தைக் கண்டுபிடிச்ச போலீஸார், நான் இருக்கும் இடத்தைச் சொல்லச் சொல்லி என் நாலு நண்பர்கள் வீட்டுக்கும் போய் விசாரிச்சிருக்காங்க; மிரட்டியிருக்காங்க.  நிறைய அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும், அவங்க நால்வருமே என்னைப் பத்தி ஒரு வார்த்தைக்கூட போலீஸார்கிட்ட சொல்லலை. `குஷ்புகூட இனியும் நட்பு வெச்சு சுத்தினா, நிச்சயம் உங்க பொண்ணு பேரு கெட்டுடும்'னு பிருந்தா அம்மாகிட்ட பலரும் சொல்லி உசுப்பேத்தியிருக்காங்க.

`குஷ்புகூட நட்பு வெச்சிருப்பதால் என் பொண்ணுக்குக் கெட்ட பேரு வரும்னா அப்படியொரு நிலை வரட்டும். அதைப் பத்தி நான் கவலைப்படமாட்டேன். குஷ்புவும் என் மகள்தான். என் பொண்ணுங்களைப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க கவலைப்பட வேண்டாம்'னு எனக்கு ஆதரவா பேசியிருக்காங்க, பிருந்தாவின் அம்மா. 

என் பொண்ணுக்கு, என் நண்பர்கள் பெற்றோர் மாதிரி. அவங்க குழந்தைகளுக்கும் நானும் என் கணவரும் பெற்றோர் மாதிரி. சுஜாதாவின் மருமகன் நடிகர் ஜெயம் ரவிக்கு நானும் மாமியார் மாதிரிதான்.
குஷ்பு

என் பொண்ணுக்கு, என் நண்பர்கள் பெற்றோர் மாதிரி. அவங்க குழந்தைகளுக்கும் நானும் என் கணவரும் பெற்றோர் மாதிரி. சுஜாதாவின் மருமகன் நடிகர் ஜெயம் ரவிக்கு நானும் மாமியார் மாதிரிதான். இப்படித்தான் எங்க நட்பு, எங்களோடு மட்டும் இல்லாம, குடும்ப பந்தத்திலும் சந்தோஷமா தொடருது" என்று புன்னகைக்கிறார் குஷ்பு.