Published:Updated:

``நாங்க எதுக்கு வெளியேறணும்னு வாக்குவாதம் செய்தேன்!"- நடிகை ரேவதி பகிரும் காஷ்மீர் நினைவுகள்

கு.ஆனந்தராஜ்

காஷ்மீர்ல வாழ்ந்த என் இளமைக்கால நினைவுகளை என் குழந்தையிடம் மகிழ்ச்சியாக நினைவுகூர்வேன்.

நடிகை ரேவதி
நடிகை ரேவதி

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ஆகியவை நீக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது, அந்த அழகிய தேசம்.

நடிகை ரேவதி
நடிகை ரேவதி

முன்னாள் ராணுவ அதிகாரியின் மகளான நடிகை ரேவதி, காஷ்மீரில் வாழ்ந்த தன் இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

``என் அப்பா ராணுவத்துல இருந்ததால, இந்தியாவின் பல மாநிலங்கள்ல வளர்ந்தேன். நான் ஏழாவது படிக்கிறப்போ, காஷ்மீரின் பாராமுல்லா பகுதியில ஆறு மாதங்கள் வசிச்சேன். பனிமலைகள், அழகிய இயற்கைக் காட்சிகள்னு அந்த ஊர் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. 

காஷ்மீரின் அழகை நாம் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அந்தப் பழக்கத்தை நம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கணும். குறிப்பா, அங்கு வசிக்கும் மக்கள் நிம்மதியாகவும் அச்ச உணர்வு இல்லாமலும் வாழணும்.
நடிகை ரேவதி

திடீர்னு எமர்ஜென்சி சூழல் ஏற்பட, ராணுவ அதிகாரிகளைத் தவிர பொதுமக்கள் எல்லோரையும் அங்கிருந்து வெளியேற உத்தரவு போட்டாங்க. `இத்தனை நாளா நான் இங்கதானே இருந்தேன். இப்போ, எதுக்கு எங்களை வெளியேறச் சொல்றாங்க? நாங்க எதுக்கு வெளியேறணும்’னு எங்கப்பாகிட்ட வாக்குவாதம் செய்தேன். விருப்பமில்லாம, காஷ்மீர்ல இருந்து வெளியேறினோம்.

`டியர் அமித் ஷா; இப்படிக்கு இல்டிஜா முப்தி’ - மெகபூபா முப்தி மகளின் வேதனை கடிதம்

ஒருநாள் எங்கப்பா, அந்த வயசுல எனக்குப் புரியும்படியா காஷ்மீர் மாநிலத்துல நடக்கிற தீவிரவாதப் பிரச்னைகள்குறித்துச் சொன்னார். பின்னர் சினிமாவில் நடிக்கும்போது, ஷூட்டிங்காக ஒருமுறைகூட காஷ்மீர் போக வாய்ப்பு கிடைக்கலை. ஆனா, தனிப்பட்ட முறையில் காஷ்மீருக்கு சுற்றுலா போயிருக்கேன். அங்க நடக்கும் அரசியல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுடன் காஷ்மீரை நான் எப்போதும் அணுகியதே இல்லை. 

காஷ்மீர்
காஷ்மீர்

காஷ்மீர்ல வாழ்ந்த என் இளமைக்கால நினைவுகளை என் குழந்தையிடம் மகிழ்ச்சியாக நினைவுகூர்வேன். உலக அளவில் மிகச் சிறந்த சுற்றுலா தலம் அது. காஷ்மீரின் அழகை, நாம் தொடர்ந்து பாதுகாப்பதுடன், அந்தப் பழக்கத்தை நம் அடுத்தடுத்த தலைமுறைக்கும் கற்றுக்கொடுக்கணும். குறிப்பா, அங்கு வசிக்கும் மக்கள் நிம்மதியாகவும் அச்ச உணர்வு இல்லாமலும் வாழணும்" என்கிறார் ரேவதி.