Published:Updated:

வாசகர் வாய்ஸ்: தமிழகத்தில் திருநங்கைகள் இனி பிச்சை எடுக்கக்கூடாது! - மாற்றுமா புதிய அரசு? #MyVikatan

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கலைநிகழ்ச்சி ஒன்றில் திருநங்கைகள்!
கலைநிகழ்ச்சி ஒன்றில் திருநங்கைகள்!

ஒரு திருநங்கை சாதனையாளர்களை பற்றி கூட பள்ளி பாட புத்தகங்களில் காணமுடியவில்லை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

கடந்த மே 8-ம் தேதியன்று நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகளுக்கும் இலவசமாகப் பயணிக்கும் வாய்ப்பைத் தர வேண்டும் என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளுக்கும் இலவச பயண வசதி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

2021 தமிழக சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக அரசு வேலைகளில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை என்று அறிவித்துள்ளது தி.மு.க அரசு. இந்த தி.மு.க அரசு திருநங்கைகளுக்கும் அரசு வேலை கொடுத்து அவர்களின் வாழ்வை மாற்ற முன்வர வேண்டும், தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தமிழக பேருந்து நிலையங்களில் ரயில் நிலையங்களில் அஞ்சுக்கும் பத்துக்கும் கையேந்தி கொண்டிருக்கும் கிட்டத்தட்ட எட்டாயிரம் திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கும் சேர்த்து தி.மு.க அரசு யோசிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

 திருநங்கைகள்
திருநங்கைகள்

சமூகத்தில் திருநங்கைகள்:

அலி, உஸ் போன்ற இழி சொற்களால் அழைக்கப்பட்டுக் வந்த திருநங்கைகளுக்கு 'திருநங்கை' எனப் பெயர் மாற்றியவர் கலைஞர் மு. கருணாநிதி. திருநங்கை என்ற பெயர்மாற்றம் உண்மையில் ஒரு சில திருநங்கைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎஸ் உள்ளிட்ட நிறைய அரசுப் பணிகளில், டிவி தொகுப்பாளர் போன்ற தனியார் பணிகளில் இன்று திருநங்கைகள் பணியாற்றி வருகின்றனர். ஆனாலும் நிறைய திருநங்கைகளின் வாழ்க்கை மாறியதாகத் தெரியவில்லை.

பள்ளி பாடப் புத்தகங்களில் திருநங்கைகள்:

2018-ம் ஆண்டு முதல் பள்ளி பாடப் புத்தகங்களில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதிலும் குறிப்பாக அயோத்திதாசர் போன்ற தெரிந்துகொள்ளப்பட வேண்டிய மனிதர்களைப் பற்றிய தகவல்கள் உண்மையில் வரவேற்கதக்கவை. அதேபோன்று தமிழகத்தைச் சார்ந்த சாதனை மனிதர்களையும் புத்தகங்களில் காண முடிகிறது. ஆனால் ஒரு திருநங்கை சாதனையாளர்களை கூட பள்ளி பாடப் புத்தகங்களில் காணமுடியவில்லை. திருநங்கைகள் குறித்தான அறிவை, அவர்களை சக மனிதராக நடத்தும் பழக்கவழக்கங்கள் போன்றவற்றை மாணவ மாணவிகள் இளம் வயதிலயே அறிந்துகொள்ள பாடப் புத்தகங்களில் சாதனை திருநங்கைகள் பற்றிய தகவல்களும் இடம்பெறுதல் அவசியமாகிறது.

திருநங்கை
திருநங்கை

சினிமாவில் திருநங்கைகள்:

பேரன்பு, நாடோடிகள் 2, காஞ்சனா, தர்மதுரை, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் திருநங்கைகள் குறித்து முற்போக்கான கருத்துகள், காட்சிகள் இடம்பெற, 'தர்பார்' படத்தில் காசுக்கு கைதட்டி ஆடும் நபர்களாக திருநங்கைகள் சித்திரிக்கப்பட்டிருந்தார்கள்.

ஆதலால் இவர்களின் நிலைமை முற்றிலுமாக மாற தமிழக அரசு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசு நினைத்தால் தமிழகத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் 'குடும்பத்தால்' துரத்தி அடிக்கப்பட்ட பெரும்பாலான திருநங்கைகளின் வாழ்க்கை மொத்தமாக மாறும்.

- ராசு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு