Published:Updated:

``அந்த சம்பவத்தை மறந்துட்டோம்; எங்க வேண்டுகோள் இதுதான்!" - இயக்குநர் ரமணாவின் மனைவி

director ramana with actor vijay
director ramana with actor vijay

நடிகர் விஜய், மனைவி சங்கீதாவுடன் எங்க வீட்டுக்கு வந்து, என் கணவருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்த `திருமலை' படத்தை இயக்கியவர், ரமணா. வெற்றிப் படத்துடன் தன் இயக்குநர் பயணத்தைத் தொடங்கியவர், `சுள்ளான்', `ஆதி' ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். அதன்பிறகு, புற்றுநோய் தாக்கத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டவர், மீண்டும் படம் இயக்கும் முனைப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறார். 

director ramana family
director ramana family

சினிமா துறையினர் மற்றும் சினிமா ரசிகர்கள் பலரும் ரமணாவை மறந்துபோய் இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் ரமணாவிடம் நடந்துகொண்ட விதம், கடும் விமர்சனங்களை உருவாக்கியது. அதன்பிறகு, அவரது சினிமா பயணம் குறித்தும், புற்றுநோய் தாக்கத்திலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டது குறித்தும் பலரும் பேசத் தொடங்கினர். ரமணாவின் மனைவி சாந்தா ரமணாவிடம் பேசினோம். கணவர் குறித்து மகிழ்ச்சியுடன் பேசினார்.

"என் கணவர், சினிமா மேல அதீத காதல் கொண்டவர். அவர் உதவி இயக்குநரா இருந்தப்போ, இரண்டு வீட்டார் ஏற்பாட்டில் எங்க கல்யாணம் நடந்துச்சு. அப்போ, சினிமா மேல எனக்கு ஆர்வம் இல்லை. ஆனா, நிச்சயம் இயக்குநராகி என் கணவர் புகழ்பெறுவார்னு உறுதியா நம்பினேன்.

director ramana family
director ramana family

அவருடைய சினிமா வேலைகள்ல நான் எந்தத் தொந்தரவும் செய்ய மாட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் போக மாட்டேன். என் கணவர் திறமையானவர். உதவி இயக்குநரா நல்லா உழைச்சார். `திருமலை’ படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைச்சுது. அந்தப் படம் என் கணவருக்கு மட்டுமில்லாமல், நடிகர் விஜய் சாருக்கும் திருப்புமுனையைக் கொடுத்துச்சு.

அடுத்து `சுள்ளான்’, `ஆதி’ ஆகிய படங்களை இயக்கினார். பிறகு, என் கணவரிடம் உதவி இயக்குநரா இருந்த ஒருவர், `குதிரை'னு ஒரு படம் இயக்கினார். அதில் என் கணவர் நடிச்சார். 2010-ம் ஆண்டு, அந்தப் படத்துக்கு டப்பிங் கொடுத்தபோதுதான், அவர் குரல் க்ராக் ஆகிற மாதிரி இருந்துச்சு. தொடர்ந்து அந்த உணர்வு தெரிய, அவருடைய குரலில் சிக்கல் இருப்பது தெரியவந்துச்சு. பிறகு, மருத்துவமனையில பரிசோதனை செய்துபார்த்தோம். அந்த 2010-ம் ஆண்டு, என் கணவருக்கு தொண்டைப் புற்றுநோய் இருப்பது தெரிஞ்சது.  

ஒரு கலைஞனுக்கே உண்டான சின்ன ஆதங்கம் அவருக்குள் நிச்சயம் இருக்கும். முதல் படம் இயக்கியபோது இருந்ததைவிட அதிக உத்வேகத்துடன் அவர் செயல்படுறார். அவர் நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும்னு ஒரு ரசிகையா நான் காத்திட்டிருக்கேன்
சாந்தா ரமணா
'ஆதி'யில் என்ன தப்பு... 'திருமலை' பைக் எங்கே? - இயக்குநர் ரமணா

குரல் அவருக்கு உயிர்போல. அது தன்னியல்பை இழந்தப்போ, அவரால ஏத்துக்கவே முடியலை. அவரைவிடவும் பேரதிர்ச்சி எனக்கு. கலங்கினாலும், உடனடியா சிகிச்சைக்குத் தயாரானார். பக்கபலமா இருந்தாலும், அவருடைய வலியை என்னால ஏத்துக்க முடியாதே. ஆனாலும் முடிஞ்சவரை அவருக்கு ஆறுதலா இருந்தேன். அப்போ எங்க பொண்ணுங்க குழந்தைகளா இருந்தாங்க. கஷ்டத்தைக் கொடுத்த கடவுள், அதை தாங்கிக்கும் நம்பிக்கையையும் எங்களுக்குக் கொடுத்தார். 2011-ம் ஆண்டு என் கணவருக்குப் புற்றுநோய் முழுமையா குணமாகிடுச்சு.

அந்த நேரத்தில் நடிகர் விஜய், மனைவி சங்கீதாவுடன் எங்க வீட்டுக்கு வந்து, என் கணவருக்கு ஆறுதல் கூறினார். நிறைய பிரபலங்களும் அப்போ நம்பிக்கையா பேசினாங்க. ஆபரேஷன் செய்யப்பட்டிருப்பதால, அவர் பேசும்போது கழுத்துல கைவெச்சுதான் பேசுவார். அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர, என் கணவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததை அவரும் நாங்களும் மறந்து செயல்படுறோம். ரொம்பவே இயல்பா, உற்சாகமா என் கணவர் வேலை செய்றார்” என்கிற சாந்தா, கணவரின் தற்போதைய சினிமா ஆர்வம் குறித்துப் பேசுகிறார்.

director ramana with wife
director ramana with wife

"சிகிச்சைகள் போயிட்டிருந்ததால, 2010-ம் ஆண்டு முதல் ரெண்டு வருஷம் அவரால் சினிமா பணிகள்ல கவனம் செலுத்த நேரமில்லை. பிறகு, தொடர்ந்து இப்போவரை படம் இயக்குறதுக்கான முயற்சிகளை எடுத்துட்டேதான் இருக்கார். நிறைய தயாரிப்பாளர்களை சந்திச்சு கதை சொல்லிட்டே இருக்கார். குறைந்தபட்சம் மூணு மணிநேரம், இருந்த இடத்தைவிட்டு நகராமல் தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லுவார்.

வீட்டுல எங்ககிட்டயும் மணிக்கணக்கில் கதை சொல்லுவார். அவர் கதை சொல்லுற விதம் ரொம்ப அழகா இருக்கும். `கதை நல்லாயிருக்கு. நாம படம் பண்ணலாம்’னுதான் பல தயாரிப்பாளர்கள் சொல்றாங்க. ஆனா, இதுவரை அதுக்கான சூழல் அமையலை. அதனால, அவர் வருத்தப்பட்டு எங்ககிட்ட பேசினதில்லை. 

director ramana family
director ramana family

பல வருடங்களா அவர் படம் இயக்கலை. அதனால, பொருளாதார ரீதியா எங்களுக்கு சிரமம் இருக்கு. ஆனா, அதையெல்லாம் சமாளிச்சுடுறோம். `என் திறமைக்கு மறுபடியும் நல்ல வாய்ப்பு கிடைக்கும்’னு எங்ககிட்ட சொல்லுவார். ஆனா, ஒரு கலைஞனுக்கே உண்டான சின்ன ஆதங்கம் அவருக்குள் நிச்சயம் இருக்கும்.

குரல் அவருக்கு உயிர்போல. அது தன்னியல்பை இழந்தப்போ, அவரால ஏத்துக்கவே முடியலை. அவரைவிடவும் பேரதிர்ச்சி எனக்கு. கலங்கினாலும், உடனடியா சிகிச்சைக்குத் தயாரானார்.
சாந்தா ரமணா
`வீட்டுக்கே வந்து வருத்தம் தெரிவித்த காவல்துறை அதிகாரிகள்!' - நெகிழும் இயக்குநர் ரமணா

முதல் படம் இயக்கியபோது இருந்ததைவிட அதிக உத்வேகத்துடன் அவர் செயல்படுறார். அவர் நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும்னு ஒரு ரசிகையா நான் காத்திட்டிருக்கேன்” என்பவர், சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்துக் காவலர் பேசிய விவகாரம் குறித்து சில கருத்துகளைப் பதிவுசெய்தார்.

"அந்தச் சம்பவம் நடந்தப்போ, நானும் காருக்குள்தான் இருந்தேன். சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவலர் பேசிய வார்த்தைகள் யாருமே ஏத்துக்க முடியாதவை. அவர் குடும்பத்தைச் சேர்ந்தவங்க, நண்பர்களா இருந்தா அந்தக் காவலர் அப்படிப் பேசியிருப்பாரா? பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை யாரா இருந்தாலும் அடிப்படையில் எல்லோரும் மனிதர்கள்தானே! குறைந்தபட்ச மனித நேயம் சக மனிதர்கள்கிட்ட குறைஞ்சுகிட்டே வருவதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. அந்த விஷயம் நடந்தப்போ, என் கணவர் ஓர் இயக்குநர்னு அவரும் நாங்களும் எதுவும் சொல்லிக்கலை.

director ramana
director ramana

பிறகு, என் கணவரின் ஓட்டுநர் உரிமத்தை வாங்கப் போன எங்க பொண்ணையும் அந்த போக்குவரத்துக் காவலர் காயப்படுத்தியிருக்கார். அதனால எங்க மொத்தக் குடும்பத்துக்கும் பெரிய வருத்தம். அதை இப்போ மறந்துட்டோம். அந்த போக்குவரத்துக் காவலரும் சரி, மத்த யாரா இருந்தாலும் சரி, சக மனிதர்களைக் காயப்படுத்த வேண்டாம்" என்று ஆதங்கத்துடன் வேண்டுகோள் விடுக்கிறார், சாந்தா ரமணா.

அடுத்த கட்டுரைக்கு