Published:Updated:

வழிகாட்டிய கல்லூரிக்கு ரூ.20 கோடி சொத்தைக் கொடுத்த மருத்துவர்... மோட்டிவேஷன் பெண்மணி!

உமா தேவி

உமா தேவி, தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முழுவதையும் குண்டூர் அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

வழிகாட்டிய கல்லூரிக்கு ரூ.20 கோடி சொத்தைக் கொடுத்த மருத்துவர்... மோட்டிவேஷன் பெண்மணி!

உமா தேவி, தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முழுவதையும் குண்டூர் அரசு மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

Published:Updated:
உமா தேவி

நமக்கு கல்வி புகட்டி உயர்த்திய பள்ளி, கல்லூரிகளை நாம் மறப்பதில்லை. வளர்ந்து நல்ல நிலையை எட்டியதும், நம்மை ஆளாக்கிய கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முடிந்தளவுக்கு உதவிகள் செய்வது பலரின் வழக்கமாக இருக்கிறது. ஆனால், தன்னுடைய முன்னேற்றத்துக்கு படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்த மருத்துவக் கல்லூரிக்கு, தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நன்கொடையாக அளித்து ஆச்சர்யப் படுத்தி இருக்கிறார், ஆந்திராவைச் சேர்ந்த உமா தேவி கவினி.

மருத்துவர்
மருத்துவர்

ஆந்திரப் பிரதேசம் குண்டூரைச் சேர்ந்த, அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்தான் உமா தேவி. இவர் குண்டூர் மருத்துவக் கல்லூரியில் தன்னுடைய மருத்துவப் படிப்பை 1965-ம் ஆண்டு முடித்தார். அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், அங்கேயே வேலை செய்து செட்டிலானார். அங்கு, இம்யூனாலஜி நிபுணராகவும், ஒவ்வாமை நிபுணராகவும் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், குண்டூர் மருத்துவக் கல்லூரியின் 17வது ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் ரீயூனியன் கூட்டம் (Guntur Medical College Alumni Association, North America- GMCANA) டல்லாஸில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உமா தேவி, தன்னுடைய 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து முழுவதையும் குண்டூர் அரசு மருத்துவ மனைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

Donate
Donate

2008-ம் ஆண்டு முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் உமா தேவி இருந்துள்ளார். தற்போது கட்டவிருக்கும் தாய் - சேய் மருத்துவமனைக்கு, இவரின் பெயரை வைக்க அக்குழு உறுப்பினர்கள் பரிந்துரைத்தபோதும், அதை நிராகரித்து 3 ஆண்டுகளுக்கு முன் இறந்த தன்னுடைய கணவர் கனூரி ராமச்சந்திர ராவ் பெயரை வைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் தன்னுடைய முழு சொத்தையும் ஒரு நல்ல காரணத்துக்காக மருத்துவமனைக்குக் கொடுத்துள்ளார். இவரின் இந்தச் செயலுக்கு அனைவரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். அனைவருக்கும் ரியல் மோட்டிவேஷனாக மாறியுள்ளது, உமா தேவியின் இந்தச் செயல்.