Published:Updated:

சர்வதேச பெண்கள் தினம்: 60 ஆண்டு கால முன்னாள் மாணவர்களின் நாஸ்டாலெஜிக் சந்திப்பு!

சர்வதேச பெண்கள் தினம்

பெண்கள் கல்வி கற்பதே சவாலாக கருதப்பட்ட 60-களில் பொறியியல் படிப்பை முடித்து பல்வேறு துறைகளிலும் கோலோச்சிய பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது மிக நெகிழ்வாக அமைந்தது

சர்வதேச பெண்கள் தினம்: 60 ஆண்டு கால முன்னாள் மாணவர்களின் நாஸ்டாலெஜிக் சந்திப்பு!

பெண்கள் கல்வி கற்பதே சவாலாக கருதப்பட்ட 60-களில் பொறியியல் படிப்பை முடித்து பல்வேறு துறைகளிலும் கோலோச்சிய பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது மிக நெகிழ்வாக அமைந்தது

Published:Updated:
சர்வதேச பெண்கள் தினம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிண்டி பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கான சங்கம் சார்பாக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1962-ம் ஆண்டிலிருந்து இந்தாண்டு வரை அக்கல்லூரியில் படித்த சுமார் 75 முன்னாள் மாணவிகள் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர். பெண்கள் கல்வி கற்பதே சவாலாக கருதப்பட்ட 60-களில் பொறியியல் படிப்பை முடித்து பல்வேறு துறைகளிலும் கோலோச்சிய பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது மிக நெகிழ்வாக அமைந்தது.

 சர்வதேச பெண்கள் தினம்
சர்வதேச பெண்கள் தினம்

கடந்த மார்ச் 5-ம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் சமூகப்பணி துறையின் தலைவர் டாக்டர்.லூர்து மேரி. பெண்ணுரிமை, பாலின சமத்துவம், பெண்களுக்கான நிதி சுதந்திரம் ஆகியவற்றை பற்றி பேசிய அவர் பெண்களின் வாழ்க்கையில் திருமணத்தின் பங்கு பற்றியும் பேசினார் “ பிறருக்காக அல்லாமல் தம் கனவுகளை குறிக்கோள்களை மதிக்கும் ஒரு துணையை கண்டறிவது ஒரு பெண்ணுக்கு மிக முக்கியமான ஒன்று. என் தோழிகளுக்கு, உறவுகளுக்கு திருமணமாகிவிட்டது என்றெல்லாம் எண்ணி குழம்பி கொள்ளாது தன்னிலை மறவாது வாழ்தல் மிகவும் அவசியம்” என்று பேசினார் அவர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இச்சந்திப்பை மேலும் சிறப்பிக்க கிண்டி பொறியியல் கல்லூரியில் 1962-ம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்த திருமதி.சுலோச்சனா கலந்துகொண்டார். அவர் பேசுகையில் “ சமையல் என்பது வாழ்வதற்கான அடிப்படை திறன். அதில் பாலின பாகுபாடுகள் அறவே இருக்கக்கூடாது. மேலும் இருவரும் தத்தமது கருத்துகளை வெளிப்படையாக சமமாக பகிர்ந்துகொண்டால் அவரவர் லட்சியங்களை தடையின்றி எட்டிப்பிடிக்க முடியும்” என்றார்.

 சர்வதேச பெண்கள் தினம்
சர்வதேச பெண்கள் தினம்

இவர்களுடன் டெக்னி கலர் இந்தியாவின் மூத்த மேலாளரான திருமதி.அனுராதாவும் பெண்கள் சந்திக்கும் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த சவால்களை பற்றி விளக்கினார். “ வேலைக்கு செல்லும் பெரும்பாலான பெண்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ‘இவள் சுயநலத்துடன் செயல்படுகிறாள்' என்பது தான். முன்பு கல்லூரி முடித்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு திருமணம் ஆகும் பட்சத்தில் அவர்கள் தங்களுக்கு இருக்கின்ற அனைத்து பொறுப்புகளையும் விட்டுவிடும் நிலை இருந்தது. அந்தநிலை இன்று சற்றே மாறியிருந்தாலும் நாம் பயணப்பட வேண்டிய தூரம் வெகு தொலைவு” என்று கூறினார்.

தொடர்ந்து விளையாட்டு போட்டிகள், புத்தகங்கள் பகிரும் நிகழ்வு ஆகியவற்றிற்கு பிறகு நெகிழ்வாக விடைபெற்றனர் முன்னாள் மாணவிகள். முன்னாள் மாணவர் சங்கத்தின் ரெக்சிலின் தெரேசா, பிரசன்னா ராஜகோபால், அல்லிராணி, கீதா ராஜு ஆகியோரின் களப்பணியாலேயே பல்வேறு இடங்களில் இருந்த இவர்களை ஒன்று திரட்டி இந்நிகழ்வு சாத்தியமானது.