Published:Updated:

``பெண்கள் கபடியில் சாதிக்க உடல்வலிமை மட்டும் போதாது!'' - தமிழகத்தின் முதல் பெண் கபடி நடுவர் சந்தியா

`ப்ரோ கபடி லீக் போட்டிக்கு நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில், என்னைவிட கூடுதலான மகிழ்ச்சி அடைந்தது எனது குடும்பமும் பள்ளியும்தான்’

``கபடி... கபடி... கபடி...” என்று அரங்கம் அதிரும் ஓசை கேட்கிறது. இரண்டு அணிகள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டிருக்க, நடுவர் உடை அணிந்த பெண் ஒருவர் தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார். பெங்களூருவின் ஸ்ரீ கண்டிவீரா உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ப்ரோ கபடி லீக்கில், தமிழகத்திலிருந்து பெண் நடுவராகப் பங்கேற்றிருக்கும் எம்.கே.சந்தியாதான் அந்தப் பெண். கபடிப் போட்டிகளில் தமிழகத்தின் முதல் பெண் நடுவர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. பரபரப்பாக இருந்தவரிடம் போட்டியின் இடைவேளையில் பேசினோம்.

Referee Panel
Referee Panel

``கபடிதான் என் உலகம். பள்ளி அளவிலான போட்டிகளில் பங்கேற்றதுதான் என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிய போதே, நடுவராக வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் துளிர்விட தொடங்கியது. கல்யாணத்துக்குப் பின், என் கணவரின் ஊக்கத்தாலும், நான் தற்போது பணியாற்றிவரும் வேலூர் ஸ்ப்ரிங் டே பள்ளியின் ஆதரவினாலும் கபடி போட்டியின் நடுவராகத் தேர்ந்தெடுக்கபட்டு, மண்டல அளவிலான போட்டிகளிலும் மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றினேன். ப்ரோ கபடி லீக் போட்டிக்கு நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில், என்னைவிட கூடுதலான மகிழ்ச்சி அடைந்தது எனது குடும்பமும் பள்ளியும்தான்" என்றவரின் கண்களில் சாதித்த பெருமை மின்னுகிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பெரியபுதூர்தான் சந்தியாவின் சொந்த ஊர். காமராஜர்-கோட்டீஸ்வரி தம்பதியின் நான்கு பெண்குழந்தைகளில் மூத்தவர். இவரது மூன்று தங்கைகளுமே தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். தற்போது, இவரின் தங்கைகளில் இருவர் உடற்கல்வி ஆசிரியர்களாக வேலூரில் பணிபுரிகின்றனர். இவரது காதல் கணவர் கதிரவனும் தேசிய அளவிலான கபடி வீரர்தான். தற்போது, தனியார் கம்பெனியில் பணிபுரியும் அவர், உள்ளூர் கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடிவருகிறார். நேஷனல் அணியில் விளையாடியபோதுதான் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

Sandhya's Family
Sandhya's Family

9 -ம் வகுப்பு படிக்கும்போது, உடற்கல்வி வகுப்பில் சக மாணவிகள் கபடி விளையாடுவதைப் பார்த்த சந்தியாவுக்கு தானும் இதுபோல விளையாட வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியிருக்கிறது. பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரிடம் கபடி அணியில் விளையாட வாய்ப்பு கேட்டார். உடற்கல்வி ஆசிரியர், கபடி அணியில் சேர, சில தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் எனக் கூறிவிடவே, முழுமூச்சாக விளையாடி, பள்ளி அளவிலான அணியில் இடம்பெற்றார். அதன்பிறகு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள்வரை விளையாடியுள்ளார். திருமணத்துக்குப் பிறகு, சிலகாலம் கபடிக்கு ஓய்வளித்திருந்தவர், மீண்டும் 2015-ல் விளையாட வந்துள்ளார்.

2015 தேசிய மகளிர் சீனியர் கபடி போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று சிறப்பாக விளையாடியதோடு அல்லாமல் காலிறுதிச் சுற்று வரை முன்னேறினார். அதன்பின், குடும்பத்தினரும் கணவரும் தந்த ஊக்கத்தினால் நடுவர் பதவிக்கான தேர்வுக்கு முயன்று, அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டார். அவரது உழைப்புக்கான பலனும் கிடைத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2018-ம் ஆண்டு, ப்ரோ கபடி லீகுக்கான நடுவர் தேர்வு சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட இவர் எழுத்து, உடற்வலிமை மற்றும் தேர்வு விளையாட்டுகளில் தேர்ச்சிபெற்று தமிழகத்திலிருந்து முதல் பெண் கபடி நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

`மறுபடியும் கபடி விளையாடணும் சார்!' - ஈரோடு கலெக்டரிடம் கலங்கிய கோமாவிலிருந்து மீண்ட இளம்பெண்

இவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற போட்டியாளர்களுடன் மும்பையில் நடைபெற்ற 8 நாள் முகாமில் கலந்துகொண்டு தேர்ச்சியும் பெற்றுவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு