Published:Updated:

`` `நான் பாஸ் ஆகிட்டேன்'னு ஒரு போன் கால் வரும் பாருங்க... அப்போ...!" - புஷ்பாவின் மனிதநேயம்

Pushpa
Pushpa

"தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே என்கிட்ட தகவல் சொல்லிடுவாங்க. என் செலவிலேயே பஸ்ல தேர்வெழுதப்போயிடுவேன்."

உலக மனிதநேய தினம் (world humanitarian day) இன்று. மனிதநேயம்தான், மனிதத்தின் மாண்பை உணர்த்துகிறது. அதற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார், பெங்களூரைச் சேர்ந்த புஷ்பா. 

Pushpa
Pushpa

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்ற தன் பேனாவை ஆயுதமாகப் பயன்படுத்திவருகிறார். தேர்வு எழுத முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு, தேர்வெழுதி உதவுவதையே தன் வாழ்வின் முக்கியப் பணியாகச் செய்துவருகிறார். புஷ்பாவினால் பயனடைந்த பலநூறு பேர் இன்று புதிய விடியலுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். தன் சேவைப் பணி குறித்துப் பேசும் புஷ்பாவின் முகத்தில் மெல்லிய புன்னகை விரிகிறது.

"மிடில் கிளாஸ் குடும்பம் எங்களுடையது. நான் ஏழாவது படிக்கிறப்போ குடும்பச் சூழல் மிகவும் சிக்கலாகிடுச்சு. அதனால தேர்வுக் கட்டணம் கட்ட முடியாம பல நாள்கள் தவிச்சேன். நிறைய அவமானங்களை எதிர்கொண்டேன். என் படிப்புச் செலவுக்குச் சிலர் உதவி செய்ததால அப்போ படிப்புத் தடைப்படலை. 

Pushpa
Pushpa

ஆனா, நல்லா படிக்கணும்ங்கிற என்னுடைய ஆசை அடுத்த சில ஆண்டுகளுக்குக்கூட நீடிக்கலை. அப்பா உடல்நிலை சரியில்லாம படுக்கையில் இருந்தார். அப்போ அம்மாவின் 500 ரூபாய் மாதச் சம்பளத்தில்தான் குடும்பமே இயங்கிச்சு. அந்த நிலையில் மூணு வேளையும் சாப்பிடுறதே சிரமமா இருந்துச்சு.

இந்நிலையில், ரொம்பவே வருத்தத்துடன் என் படிப்பைக் கைவிடவேண்டிய நிலை. பிறகு, வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்" என்று தன் முன்கதைச் சொல்லும் புஷ்பாவின் சேவைப் பணி அதன் பிறகே தொடங்கியிருக்கிறது.

Pushpa with President
Pushpa with President

"என் தோழி வேலை செய்ற என்.ஜி.ஓ ஒன்றுக்கு அடிக்கடி போவேன். அதனால் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் பழக வாய்ப்புக் கிடைச்சுது. அப்போ அவங்களோட படிப்பு ஏக்கத்தை என்கிட்ட பகிர்ந்துப்பாங்க. சிரமப்பட்டு படிச்சாலும், தேர்வு எழுதுறது அவங்களுக்குப் பெரும் சவால். என்னோட படிப்புக் கனவுதான் கானல் நீராகிடுச்சு. அவங்களுக்காவது உதவி செய்யலாம்னு 2007-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வு எழுதிக்கொடுக்க ஆரம்பிச்சேன்.

`ஏழ்மையால் நம்ம வாழ்க்கை ரொம்பச் சிக்கலாகிடுச்சு. கடவுள் ஏன் இப்படியெல்லாம் பண்றார்?'னு அதுவரை எனக்கிருந்த விரக்தியான எண்ணம் சுக்குநூறா உடைஞ்சுது. என்னால படிக்கிறது மட்டும்தான் சிரமம். சின்ன வயசிலேயே வேலைக்குப் போக நேரிட்டாலும், எப்படியாச்சும் சாப்பிட்டு உயிர்வாழ முடிஞ்சுது. ஆனா, நிறைய பேருக்கு வாழ்றதே சிரமம். தங்களுடைய இயல்பான பணிகளைச் செய்துகூட பிறரின் உதவியை எதிர்பார்க்கிற நிலை.

என்னால பிறருக்குப் பண உதவி செய்ய இயலாத நிலை. ஆனா, எனக்குக் கிடைக்கிற ஓய்வு நேரத்துல மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வு எழுதிக்கொடுக்கிற பணியை மகிழ்ச்சியுடன் செய்தேன்.
புஷ்பா

இப்படி அடுத்தடுத்து நான் சந்திச்ச மனிதர்கள் ஒவ்வொருத்தர்கிட்டயும் பலவிதமான வலிகளும், வேதனைகளும் நிறைந்திருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் பெருசா வெளிக்காட்டிகாம மகிழ்ச்சியா இயங்குறதுதான் அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட பாடம். ஆனா, அவங்க எல்லோர்கிட்டயும் ஏதோ ஒரு தேடல் வைராக்கியமா இருந்துட்டே இருந்துச்சு.

என்னால பிறருக்குப் பண உதவி செய்ய இயலாத நிலை. ஆனா, எனக்குக் கிடைக்கிற ஓய்வு நேரத்துல மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வு எழுதிக்கொடுக்கிற பணியை மகிழ்ச்சியுடன் செய்தேன்" என்பவர் இதுவரை 700-க்கும் மேற்பட்ட தேர்வுகளை எழுதியிருக்கிறார். தவிர, தன்னம்பிக்கை பேச்சாளராகவும் செயல்படுகிறார்கள். இதுக்கிடையே படிப்புக் கனவை கைவிடாதவர், கரஸ்ஸில் பி.ஏ., முடித்திருக்கிறார்.

Pushpa with PM Modi
Pushpa with PM Modi

"தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே என்கிட்ட தகவல் சொல்லிடுவாங்க. அந்தத் தேதியில் நேரத்தை ஒதுக்கிடுவேன். தேர்வு எழுதுவது தொடர்பான வேண்டுகோள் எதையும் மறுக்கமாட்டேன். என் செலவிலேயே பஸ்ல தேர்வெழுதப்போயிடுவேன்.

எனக்குப் பதில் தெரிஞ்சாலும், தேர்வர் சொல்வதை மட்டுமே எழுதுவேன். அதுதானே நியாயம்! நான் தேர்வெழுதும்போதே ஒருவர் எந்த அளவுக்கு மார்க் எடுப்பாங்கனு என்னால யூகிக்க முடியும். ஆனா, நான் எதையும் வெளிக்காட்டிக்க மாட்டேன். `நீங்க தேர்ச்சிபெற வாழ்த்துகள்!'னு பாசிட்டிவா மட்டும் சொல்லுவேன்.

Vikatan
தேர்சியடைந்தப் பிறகும், வேலை வாங்கிய பிறகும் எனக்கு நன்றி சொல்வாங்க. அந்த போன் கால் வரும் தருணம் அளவில்லா மகிழ்ச்சியடைவேன். பிறர் கனவு மெய்ப்படும் அந்தத் தருணம் எனக்கு அளவுகடந்த மனநிறைவு கிடைக்கும்.
புஷ்பா

அந்த போன் கால் வரும் தருணம் அளவில்லா மகிழ்ச்சியடைவேன். பிறர் கனவு மெய்ப்படும் அந்தத் தருணம் எனக்கு அளவுகடந்த மனநிறைவு கிடைக்கும். குறிப்பா, கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவரிடமிருந்து `நாரி சக்தி புரஸ்கார்' விருதை வாங்கினேன். அப்போ, `மத்தவங்களுக்கு முன்னோடியான பணியைச் செய்றீங்க. உங்க சேவைப் பணி தொடரணும். அதற்கு என் வாழ்த்துகள்'னு சொன்னார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சார்.

Pushpa
Pushpa

பிரதமரும் என்னைப் பாராட்டினார். அதனால் மகிழ்ச்சிதான். ஆனா, அதையெல்லாம்விட நான் தேர்வெழுதிக்கொடுத்த மாற்றுத்திறனாளிகள் சொந்தக் காலில் சந்தோஷமா வாழ்வதைப் பார்த்து மகிழ்ச்சியடைவதே என் ஆகச்சிறந்த பெருமைத் தருணம்" என்று புன்னகைக்கிறார் புஷ்பா.

அடுத்த கட்டுரைக்கு