Published:Updated:

``நாங்க பண்றது வேற லெவல் காமெடி!" - The Hysterical Improv Comedy ட்ரூப்

The Hysterical Improv Comedy ட்ரூப்

நாங்க ரிஹர்சல்ல மீட் பண்றப்போ, இன்னிக்கு என்ன நடந்துச்சு-ன்னு தெரியுமா?-னு எங்க லைஃப்ல நடந்ததை மாத்தி மாத்தி சொல்லிப்போம். இதனால எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவாகிடுச்சு. அது எங்க வேலைக்கும் பெரிய அளவுல உதவுது.

``நாங்க பண்றது வேற லெவல் காமெடி!" - The Hysterical Improv Comedy ட்ரூப்

நாங்க ரிஹர்சல்ல மீட் பண்றப்போ, இன்னிக்கு என்ன நடந்துச்சு-ன்னு தெரியுமா?-னு எங்க லைஃப்ல நடந்ததை மாத்தி மாத்தி சொல்லிப்போம். இதனால எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவாகிடுச்சு. அது எங்க வேலைக்கும் பெரிய அளவுல உதவுது.

Published:Updated:
The Hysterical Improv Comedy ட்ரூப்

காமெடி என்றதும் உங்களுக்கு சட்டென யார் நினைவுக்கு வருவார்கள்? வடிவேல், கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம், சூரி... இந்த வரிசையில் இப்போது லேட்டஸ்டாக யோகிபாபுவும், ரெடின் கிங்க்ஸ்லியும் இணைந்திருக்கிறார்கள். பெண் காமெடி நட்சத்திரங்களை மனோரமா, கோவை சரளா என விரல்விட்டு எண்ணிவிடலாம்.

காமெடி!
காமெடி!

நாம் பெரும்பாலும் விரும்பிப் பார்க்கும் திரைத்துறையிலேயே இந்த நிலை இருந்து வருகிறது. இதில் ஸ்டாண்ட்-அப் காமெடியை பற்றி சொல்லவா வேண்டும்? கடந்த சில வருடங்களாகத்தான் பெண்கள் இந்தத் துறையில் கால் பதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இப்படி புதியதாக `The Hysterical - Improv comedy’ என்ற ட்ரூப் களமிறங்கி இருக்கிறது. இந்த ட்ரூப்புடனான கலகலப்பான அரட்டை இதோ...

கொஞ்சம் தூரத்திலேயே, இவர்களது சிரிப்பு சத்தம் கலகலக்க, பக்கத்தில் செல்லச்செல்ல இன்னும் அதிகமானது. சட்டென நம்மைப் பார்த்ததும் சிரிப்பை நிறுத்திவிட்டு, ``வாங்க... பயப்படாதீங்க... நாங்கெல்லாம் ஒண்ணு சேர்ந்தா இப்படிதான்" என்று பேசத்தொடங்கினார் The Hysterical ட்ரூப்பின் நிறுவனர் ஷாலினி.

The Hysterical Improv Comedy
The Hysterical Improv Comedy

``எங்க ட்ரூப்புல மொத்தம் எட்டு பேர். ரம்யா, வர்ஷா, கீர்த்தனா, வினித்ரா, நந்திதா, நேஹா, மோனிகா'' என ஒவ்வொருவரையும் ஷாலினி அறிமுகம் செய்துவைக்க, குட்டி குட்டி ஹாய்களுடன் தொடங்கியது நமது அரட்டை...

Improv காமெடி ஷோ-வா! - அப்டினா?

ஒரு ஹோஸ்ட் இருப்பாங்க, அவங்ககூட ஒரு சின்ன குரூப் இருக்கும். இவங்கெல்லாம் ஆன் த ஸ்பாட்-ல ஆடியனஸ்கிட்ட ஒரு டாபிக் கேட்டு, அந்த இடத்திலேயே ஒரு சீனை உருவாக்கறதுதான் Improv காமெடி. ஸ்டாண்ட் அப் காமெடி மாதிரி இல்லாம, இந்த improv காமெடிக்கு ஒரு குரூப் வேணும். ஸ்டாண்ட் அப் காமெடிக்கு, காமெடியையெல்லாம் முன்னாடியே தயார் பண்ணிப்பாங்க. ஆனா Improv காமெடி-ல டக்குடக்குன்னு உடனடியா ஆடியன்ஸ் கிட்ட கேட்டு, அப்போவே ஸ்டேஜ்லேயே ஒரு ஸ்கிரிப்ட்ட உருவாக்குவோம். இதுல 8 குட்டி குட்டி கேம்ஸ் இருக்கும். இப்படி எங்க ஷோ ஒரு மணி நேரம் நடக்கும்.

நம்ம இப்போ கெக்க பெக்க-ன்னு சிரிக்கறதுக்கூட Hysterical தான்!
நம்ம இப்போ கெக்க பெக்க-ன்னு சிரிக்கறதுக்கூட Hysterical தான்!

Hysterical-ன்னா என்ன? ஏன் இந்த பேர் வெச்சீங்க?

நாங்க முதல்ல பல பெயர்களை யோசிச்சோம். எங்க எல்லாருக்கும் இந்தப் பெயர்தான் பிடிச்சிருந்தது. Hysterical-ன்னா காமெடி-ன்னு அர்த்தம். நம்ம இப்போ கெக்க பெக்க-ன்னு சிரிக்கறதுக்கூட Hysterical தான். பொதுவா பெண்கள் டிராமா செய்தாலோ, அதிகமா ரியாக்ட் பண்ணினாலோ Hysterical-ன்னு சொல்லுவாங்க. அதனாலதான் ஆமா, நாங்க அதிகமா ரியாக்ட் பண்ணுவோம், டிராமா செய்வோம், கூடவே காமெடியும் பண்ணுவோம்-ன்னுதான் Hysterical பேர் வெச்சோம்.

(ஷாலினியிடம்) இவங்க 7 பேரை எப்படி செலக்ட் பண்ணுனீங்க...

வடிவேல் ஒரு காமெடி பண்ணுனார்னா, விவேக் ஒரு காமெடி பண்ணுவாருல அந்த மாதிரி தான். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் காமெடி வரும். இப்படி வேற வேற மாதிரி காமெடி பண்றவங்கள ஒண்ணா சேர்த்து ஒரு டீம் இருந்தா எப்படி இருக்கும்? அது தான் எங்க ட்ரூப்.

வேற வேற மாதிரி காமெடி பண்றவங்கள ஒண்ணா சேர்த்து ஒரு டீம்...
வேற வேற மாதிரி காமெடி பண்றவங்கள ஒண்ணா சேர்த்து ஒரு டீம்...

உங்களுக்கு எப்படி ஆடிஷன் நடந்தது?

வர்ஷா: சூப்பர் சிங்கர் ஆடிஷன் போல ஆடிஷன் இருக்கும், ஜட்ஜ் எல்லாம் இருப்பாங்கன்னு நினைச்சுதான் போனேன். ஆனா அப்படி எதுவும் நடக்கல. ஆடிஷன்ல ஒரு ரூம்-ல எல்லாரும் ரவுண்டா நின்னுகிட்டு மாத்தி மாத்தி காமெடி பண்ணுனோம். இவ்ளோதான்.

உங்க முதல் ஷோ...

கீர்த்தனா: எங்க முதல் ஷோ ஸ்பெஷல் ஷோ. எங்க குடும்பமும், ஃபிரண்ட்ஸும் தான் இருந்தாங்க. நாங்க ஒவ்வொரு காமெடி பண்ணும்போதும் அவங்க அதுக்கு சிரிக்க சிரிக்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

இது முதல் ஷோ மாதிரி இல்ல-ன்னு எல்லாரும் சொன்னப்போ ரொம்ப சந்தோசம்...
இது முதல் ஷோ மாதிரி இல்ல-ன்னு எல்லாரும் சொன்னப்போ ரொம்ப சந்தோசம்...

உங்களுக்கு கிடைத்த பெஸ்ட் விமர்சனம்...

ஷாலினி: ஷோ முடிஞ்ச அப்புறம், ஆடியன்ஸ் வந்து எங்ககிட்ட கேப்பாங்க, "நீங்க முன்னாடியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டுதானே வந்தீங்க''ன்னு கேப்பாங்க அப்போதான் எங்களுக்கு முழு சந்தோஷமும், பெருமையும் வரும். ஏன்னா நாங்க உண்மையாவே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டுப் போக மாட்டோம்.

உங்க பாண்டிங்...

வினித்ரா: நாங்க ரிஹர்சல்ல மீட் பண்றப்போ, இன்னிக்கு என்ன நடந்துச்சு-ன்னு தெரியுமா?-னு எங்க லைஃப்ல நடந்ததை மாத்தி மாத்தி சொல்லிப்போம். இதனால எங்களுக்குள்ள நல்ல நட்பு உருவாகிடுச்சு. அது எங்க வேலைக்கும் பெரிய அளவுல உதவுது.

உங்க காமெடி எப்படி இருக்கும்?

ஷாலினி: நம்ம எப்பவுமே ஒரு காமெடி பண்ணும்போது யாரையும் காயப்படுத்தக்கூடாது. அப்புறம் நம்மையே தாழ்த்திக்கக் கூடாது. அந்த மாதிரிதான் எங்க காமெடி இருக்கும்.

பிரண்ட்ஷிப்ப ஒரு கலை-ல காட்டும்போது அது ரொம்ப நல்லா வரும்...
பிரண்ட்ஷிப்ப ஒரு கலை-ல காட்டும்போது அது ரொம்ப நல்லா வரும்...

உங்க ஷோ-க்கு வந்தா என்ன உத்தரவாதம்?

மோனிகா: உங்களோட ஒரு மணி நேரம் எப்படிப் போகும்னே கண்டிப்பா தெரியாது. ஷோ நடந்துட்டு இருக்கும்போது நீங்க கண்டிப்பா டைம் பார்க்க மாட்டீங்க.

வினித்ரா: என்ன ஷோவை சட்டுன்னு முடிச்சுட்டீங்ன்னு கேப்பீங்க.

ஷாலினி: இது நிச்சயம் நல்ல புது அனுபவமா இருக்கும். புது அனுபவத்தை எதிர்பார்த்தீங்கன்னா கண்டிப்பா எங்க ஷோவுக்கு வாங்க...

என்ன மக்களே, உங்களுக்கும் இந்தப் புது அனுபவம் வேணுமா?