Published:Updated:

`எந்த உபகரணமும் இல்லை, ஆனால் அனைவரின் உதவியும் கிடைத்தது!’ - ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி

குழந்தை - சித்திரிப்பு படம் ( Photo by Omar Lopez on Unsplash )

``எந்தவித உபகரணங்களும் இல்லாத நிலையில், கிருமிநாசினி மட்டுமே கையில் இருந்தது. எனினும் சக பயணிகள், பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் அந்த போர்டில் இருந்த காவலர்களின் உதவியுடன் இதைச் செய்ய முடிந்தது. முதலுதவிக்கான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் ரயிலில் இல்லாதது பதற்றமளித்தது.’’

`எந்த உபகரணமும் இல்லை, ஆனால் அனைவரின் உதவியும் கிடைத்தது!’ - ரயிலில் பிரசவம் பார்த்த மருத்துவ மாணவி

``எந்தவித உபகரணங்களும் இல்லாத நிலையில், கிருமிநாசினி மட்டுமே கையில் இருந்தது. எனினும் சக பயணிகள், பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் அந்த போர்டில் இருந்த காவலர்களின் உதவியுடன் இதைச் செய்ய முடிந்தது. முதலுதவிக்கான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் ரயிலில் இல்லாதது பதற்றமளித்தது.’’

Published:Updated:
குழந்தை - சித்திரிப்பு படம் ( Photo by Omar Lopez on Unsplash )

ஆந்திராவில், டூரோண்டோ அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு நேற்று (செப். 13) சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், நேற்று அதிகாலை 3:30 மணியளவில் அனகப்பல்லே மாவட்டத்துக்கு அருகில் வரும் போது, ரயிலில் இருந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அவர் வலியால் துடித்ததை பார்த்த அவரின் குடும்பத்தினர், சக பயணிகளிடம் உதவி கோரியுள்ளனர். அப்போது, GITAM மருத்துவமனையில் பணிபுரியும் ஸ்வாதி ரெட்டி (23) என்ற மருத்துவ மாணவி, அவர்களுக்கு உதவியுள்ளார். ஹவுஸ் சர்ஜனான அவர் ரயிலிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க, அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ரயில் - சித்திரிப்பு படம்
ரயில் - சித்திரிப்பு படம்

இதுகுறித்து ஸ்வாதி ரெட்டி கூறுகையில், “நான் மருத்துவர் என்பது, அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு முதலில் தெரியவில்லை. எந்தவித உபகரணங்களும் இல்லாத நிலையில், கிருமிநாசினி மட்டுமே கையில் இருந்தது. எனினும் சக பயணிகள், பயணச்சீட்டு பரிசோதகர் மற்றும் அந்த போர்டில் இருந்த காவலர்களின் உதவியுடன் இதைச் செய்ய முடிந்தது. நான் தனியாக பிரசவம் பார்ப்பது இதுவே முதல் முறை. எனினும் முதல் உதவிக்கான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் ரயிலில் இல்லாதது பதற்றமளித்தது. எனினும் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக, டூரோண்டோ அதிவேக ரயில் விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் போது வழியில் எங்கும் நிறுத்தப்படுவதில்லை. எனினும் நேற்று அதிகாலை அனகப்பல்லேவில், மருத்துவக்குழுவுக்கு பயணச்சீட்டு பரிசோதகர் தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து சற்று நேரம் நிறுத்தப்பட்டது. பின், தாய் மற்றும் குழந்தையை, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Child
Child

சுவாதி ரெட்டியை பெண்ணின் குடும்பத்தினர், சக பயணிகள், மற்றும் அவர் பணிபுரியும் GITAM மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் என அனைவரும் பாராட்டியுள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடந்து, ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி. ராமராவ் மற்றும் பலர், ஸ்வாதி ரெட்டியை பாராட்டியுள்ளனர். மேலும், ரயிலில் பிறந்த பச்சிளம் குழந்தை, வாழ்நாள் முழுவதும் இலவசமாக ரயில் பயணம் செய்யலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.