Published:Updated:

இது தெரியாமப் போச்சே! சூயிங் கம் ஊதி மாதம் ரூ.67,000 வருமானம் ஈட்டும் பெண்!

chewing gum ( Representational image) ( pixabay )

நண்பர் ஒருவர் இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏன் சமூக வலைதள நிறுவனங்களுக்கு விற்கக் கூடாது என அவருக்கு ஆலோசனை வழங்க, `அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே' என அன்றிலிருந்து நிறுவனங்கள் மற்றும் அவருடைய ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப சூயிங் கம் ஊதி காசாக்கி வருகிறார்.

இது தெரியாமப் போச்சே! சூயிங் கம் ஊதி மாதம் ரூ.67,000 வருமானம் ஈட்டும் பெண்!

நண்பர் ஒருவர் இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏன் சமூக வலைதள நிறுவனங்களுக்கு விற்கக் கூடாது என அவருக்கு ஆலோசனை வழங்க, `அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே' என அன்றிலிருந்து நிறுவனங்கள் மற்றும் அவருடைய ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப சூயிங் கம் ஊதி காசாக்கி வருகிறார்.

Published:Updated:
chewing gum ( Representational image) ( pixabay )

ஒவ்வொருவருக்கென தனித் திறமைகள் இருக்கும். ஆனாலும், ஒரு சிலரே அந்தத் திறமைகளைத் தெரிந்துகொண்டு, மக்களுக்குப் பிடித்த வகையில் வெளிப்படுத்தி பிரபலமடைவதோடு, அதன் மூலம் வருவாயும் ஈட்டுவர்.

சூயிங் கம்
சூயிங் கம்
pixabay

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படித்தான் ஒரு பெண், தனக்கிருக்கும் தனித்துவமான திறமையைப் பயன்படுத்தி, மாதம் 67,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.

சிறு வயதில் அனைவருக்கும் சூயிங் கம் (chewing gum) வாங்கி, மென்று ஊதி, பபுள் விட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். நாமெல்லாம் விளையாட்டாகச் செய்த அந்த விஷயத்தை இந்தப் பெண் பிசினஸாகச் செய்து சம்பாதித்து வருகிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜெர்மனியை சேர்ந்த 30 வயது ஜூலியா ஃபோரட், தன்னுடைய வாயில், 30-க்கும் மேற்பட்ட சூயிங் கம்களை ஒரேடியாகப் போட்டு அவற்றை நன்றாக மென்று பெரிய பபுள் விட்டு, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து வந்திருக்கிறார்.

இந்நிலையில், அவருடைய நண்பர் ஒருவர் இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏன் சமூக வலைதள நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது என ஆலோசனை வழங்க, `அட இது நல்ல யோசனையாக இருக்கிறதே' என அன்றிலிருந்து நிறுவனங்கள் மற்றும் அவருடைய ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப சூயிங் கம்மை பயன்படுத்தி, பெரிது சிறிது என பபுள் விட்டு வீடியோக்களையும் புகைப்படங்களையும் காசாக்கி வருகிறார்.

representational image
representational image
pixabay

இதற்காக அவர் முதலீடு செய்யும் தொகை வெறும் 5 பவுண்டுகள் தான். அதாவது 480 ரூபாய் மட்டும்தான். அதை வைத்து `சின்ன கல்லு பெத்த லாபம்' என்பது போல் 700 பவுண்டுகள் (67,000 ரூபாய்) வரை சம்பாதிக்கிறார்.

``ஆன்லைனில் 90 சூயிங் கம்களை கொண்ட பெரிய பேக்கை மலிவான விலையில் வாங்குவேன். பெரிய பபுளாக ஊத, 10 முதல் 15 சூயிங் கம்களையும் மெகா பபுளாக ஊத 30 சூயிங் கம்களையும் உபயோகிப்பேன்.

இது என்னுடைய முழு நேர வேலை அல்ல. நான் சிவில் இன்ஜினீயர்; மார்க்கெட்டிங்கில் பட்டம் பெற்றுள்ளேன்'' என ஜூலியா ஃபோரட் கூறியுள்ளார்.