Published:Updated:

`முதல் விமானப் பயணம் எப்படி இருந்தது?' - அனுபவம் பகிர்ந்த உலகின் உயரமான பெண்!

உயரமான பெண்! ( @rumeysagelgi )

7 அடி 0.7 அங்குலம் (215.16 செ.மீ) உயரம் கொண்ட 25 வயதான ருமேசா கெல்கி, உலகிலேயே மிக உயரமான இளம்பெண் என 2014- ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

`முதல் விமானப் பயணம் எப்படி இருந்தது?' - அனுபவம் பகிர்ந்த உலகின் உயரமான பெண்!

7 அடி 0.7 அங்குலம் (215.16 செ.மீ) உயரம் கொண்ட 25 வயதான ருமேசா கெல்கி, உலகிலேயே மிக உயரமான இளம்பெண் என 2014- ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

Published:Updated:
உயரமான பெண்! ( @rumeysagelgi )

உலகிலேயே மிகவும் உயரமான பெண், விமானத்தில் தான் முதன்முறையாகப் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார், இது தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 

7 அடி 0.7 அங்குலம் (215.16 செ.மீ) உயரம் கொண்ட 25 வயதான ருமேசா கெல்கி (Rumeysa Gelgi) உலகிலேயே மிக உயரமான இளம்பெண் என 2014- ம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இவர் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோவிற்கு 13 மணி நேரம் விமானத்தில் முதன்முறையாகப் பயணித்துள்ளார். 

`முதல் விமானப் பயணம் எப்படி இருந்தது?' - அனுபவம் பகிர்ந்த உலகின் உயரமான பெண்!
@rumeysagelgi

Weaver syndrome என்ற அரிய வகை மரபணு நிலைப்பாடே, இவர் அதீத உயரம் பெறக் காரணம். இவ்வகை பாதிப்பு விரைவான வளர்ச்சியை ஏற்படுத்தி எலும்புகளின் வயதை அதிகரிக்கிறது.

இதனால் மூட்டுகளில் இயக்கம் மட்டுப்படுத்தப்படுவதோடு, நடக்கும்போது நிலைதடுமாறும் நிலையும், சுவாசம் மற்றும் விழுங்குவதில் சிரமமும் ஏற்படும் என கின்னஸ் உலக சாதனை குறிப்பிட்டுள்ளது. இவரது உடல்நிலை காரணமாக, பாதுகாப்பான பயணத்திற்காக இவர் சக்கர நாற்காலியையும், வாக்கரையும் பயன்படுத்துகிறார். 

அதீத உயரம் காரணமாக, இவரால் சாதாரண பயணிகளைப் போலப் பயணிக்க முடியாததால், இவருக்குப்  பயணிகளின் 6 இருக்கைகள் வரை நீக்கப்பட்டு, இவரின் வசதிக்கேற்ப இருக்கை அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் தன்னுடைய பயண அனுபவத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார், கெல்கி. துருக்கிய மொழியில் இருந்த அந்தப் பதிவின் ஆங்கில விளக்கத்தின் அடிப்படையில்,``இது தான் என்னுடைய முதல் விமானப் பயணம். ஆனால் இதுவே கடைசியாக இருக்காது. ஆரம்பம் முதல், முடிவு வரை குறையே இல்லாத ஒரு பயணம் இது.

இந்தப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.  மேலும் ஆறு மாதங்கள் வரை அமெரிக்காவில் தங்கி இருந்து பல வாய்ப்புகளைத் தேடவிருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார். 

இவரின் நிலைக்கேற்ப இருக்கை அமைத்துப் பயணிக்க வைத்த துருக்கி ஏர்லைன்ஸிற்கு பலரும் தங்களின் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.