பாலையூரி்ல் அறுவடை திருவிழா! | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/08/2008)

பாலையூரி்ல் அறுவடை திருவிழா!


அடுத்த கட்டம்
கு.ராமகிருஷ்ணன்
அனுபவ பகிர்வும்... அமோக மகசூலும்!

''நாத்தா இருந்த என்னை நட்டு வச்சீங்க, இன்னிக்கி நான் நாட்டுக்கே சோறு போடுற நெல்லா வெளைஞ்சி நிக்கிறேன். என்னை நட்டு வச்ச நல்லவங்களே... நீங்க நல்லாயிருக்கீங்களா?''

பளீரென்று மணிமணியாக வரிசை கட்டி நின்று வரவேற்ற நெல்மணிகளைப் பார்த்த அத்தனை விவசாய முகங்களிலும் பரவசம். ''நாம நட்ட அந்த ஒரு நாத்தா இது..? இவ்வளவு அருமையா வெளஞ்சிருக்கே'' ஆச்சர்யத் துடன் வயலை வளைய வந்தனர் விவசாயிகள்.

'இனியெல்லாம் இயற்கையே...' என்றபடி கடந்த மார்ச் 30, 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்கள், நாகப்பட்டினம் மாவட்டம், பாலையூரில் முதன்முதலாக இயற்கை வேளாண்மை நேரடி களப்பயிற்சியை ஏற்பாடு செய்தது பசுமை விகடன். 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ. நம்மாழ் வார் முன்னின்று நடத்தி வரும் இந்த பயிற்சி வகுப்பு, தற்போது தமிழக அளவில் ஒவ்வொரு மாவட்டமாக நடந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க