பசுமை மேடை

ஏரிகளைக் காப்போம்!

 சமீபத்தில் ஒரு குறும்பட ஒளிப்பதிவுக்காக, சென்னைக்கு அருகேயுள்ள மணலி சுற்றுவட்டாரத்தில் உள்ள சில கிராமங்களுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நூற்றுக்கணக்கான பரப்பளவுள்ள ஏரிகளில், கருவேல மரங்களும், நெய்வேலி காட்டாமணக்கும் வளர்ந்து, மணல் மேடுகளாகக் காட்சியளித்தன. அண்டை மாநிலங்களோடு நதிநீருக்காகப் போராடி நீதிமன்றங்களுக்குச் செலவிடும் கோடிக்கணக்கான ரூபாயில் ஒரு பகுதியைக் கொண்டு இந்த ஏரிகளை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தினால்... சென்னைக்குத் தேவையான குடிநீர் கிடைப்பதோடு, நிலத்தடி நீர் ஆதாரமும் பெருகி, அருகில் உள்ள விவசாயிகளும் பயனடைவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்