மண்புழு மன்னாரு

'மண்ணுக்கு ஏத்த பயிரைச் செய்’னு பெரியவங்க சொல்லி வெச்சிருக்காங்க. இதை மதிக்காம பயிர் செஞ்சி, நல்ல நிலத்தையும் சிலர் களர் நிலமா மாத்திடறாங்க. கரிசல் மண்ணுல கம்பு, சோளம், கேழ்வரகு, பருத்தி, உளுந்து மாதிரியான பயிர்களைத்தான் சாகுபடி செய்யணும். ஆனா, கையில பணம் இருக்குனு போர் போட்டு தண்ணி வசதி செஞ்சி நெல்லு, கரும்புனு விதம்விதமா செய்ய ஆரம்பிச்சிடறாங்க. இப்படிச் செய்தா... நல்லா இருக்கற நிலம், உங்க கண்ணு முன்னயே களர் நிலமா மாறிடும். எப்படினு கேக்கறீங்களா...? அதாவது, கரிசல் மண்ணுக்குக் கீழ, சுண்ணாம்புக் கல் நிறைய இருக்கும். கரிசல் நிலத்துல தொடர்ந்து தண்ணி நின்னுகிட்டே இருந்தா, அந்த சுண்ணாம்புங்க கரைஞ்சி மேலே வந்துடும். சுண்ணாம்புச் சத்து அளவுக்கு அதிகமா போனா, அந்த நிலம் களரா மாறிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்