மரத்தடி மாநாடு

உச்சத்தில் இலை வாழை...மந்தத்தில் கொப்பரை..!

 வங்கியில் விவசாயக் கடனுக்கு விண்ணப்பிக்க... சிட்டா, அடங்கல் நகல் தேவை என்பதால், அவற்றைப் பெற்று வர காலையிலேயே தாலூகா அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார் 'ஏரோட்டி’ ஏகாம்பரம். 'மதிய வாக்கில் மாநாட்டைக் கூட்டலாம்' என்று ஏற்கெனவே எடுத்திருந்த முடிவின்படி... மொட்டை வெயில் நேரத்தில் 'வாத்தியார்’ வெள்¬ளைச்சாமியும் 'காய்கறி’ கண்ணம்மாவும் அரச மரத்தடி திண்டில் அமர்ந்திருக்க... வியர்க்க விறுவிறுக்க வந்து சேர்ந்தார், ஏரோட்டி.

''அப்பப்பா... பத்து நிமிஷ வேலை... அதுக்கு மூணு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கு. பத்து மணிக்கே தாசில்தார் ஆபீஸுக்குப் போயிட்டேன். தாசில்தாருல இருந்து ஒருத்தருகூட அங்க இல்ல. என்னானு கேட்டா, புது கலெக்டர் வந்திருக்காரு, அவரைப் பாக்க போயிட்டாங்கனு சொன்னாங்க. ஒரு வழியா பதினோரு மணிக்கு வந்து சேந்தாங்க. வரிசையில நின்னு பணத்தைக் கட்டிச் சிட்டா வாங்குறதுக்குள்ள... தாவு தீந்துடுச்சு. என்னமோ வானத்துல இருந்து குதிச்சு வந்தாப்புல அந்த ஆபீஸுல இருக்கறவங்க பண்ற அலட்டல் தாங்க முடியல. அடுத்தாப்புல பேங்குல இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போறாய்ங்களோ'' என்று புலம்பித் தள்ளியபடியே துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார் ஏரோட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்