தூக்கலான வருமானம் கொடுக்கும் தூய்மல்லி..!

காசி. வேம்பையன்,படங்கள்: வீ. ஆனந்தஜோதி

'அதிக மகசூல்’ என்ற ஒற்றைச் சொல்லால் விவசாயிகளை மயக்கி... பாரம்பரிய ரகங்களை ஓரம் கட்டி, வீரிய ரகங்களையும், ரசாயன உரங்களையும் தலையில் கட்டியது பசுமைப் புரட்சி! கொஞ்சம் கொஞ்சமாக வீரிய ரகங்களின் வீரியம் குறையக் குறைய... நிலத்தில் இடப்படும் ரசாயனங்களின் அளவு உயர்ந்துகொண்டே போனது. விளைவு... யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், பசுமைப் புரட்சிக்கு முன்பும் சரி... பிறகும் சரி... பாரம்பரிய ரகங்கள் மகசூலில் குறை வைப்பதே கிடையாது. பல விவசாயிகள், வீரிய ரகத்தைவிட, பாரம்பரிய ரகங்களில்தான் பரம்பரை பரம்பரையாக அதிக மகசூல் அள்ளி வருகிறார்கள் என்பதே நிதர்சனம்!

இத்தகையப் பாரம்பரிய ரகங்களின் பெருமைகளைச் சரியாகப் புரிந்து கொண்ட இயற்கை ஆர்வலர்கள் பலர், அவற்றை விடாமல் தொடர்ந்து சாகுபடி செய்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி. இவர், 'தூயமல்லி’ ரக நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல வருமானமும் எடுத்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!