வேற யாராலும் சொல்ல முடியாது

இயக்குனர் ஜனநாதன்

'பசுமை விகடன்' விவசாயத்துக்குனு ஒரு பத்திரிகை... அதுவும் தமிழ்நாட்டுல மிகப்பெரிய நிறுவனத்துல இருந்து வந்தது ரொம்ப பெரிய விஷயம். முதல் இதழ்லயே என்னோட கட்டுரையும் வெளியாகியிருந்துச்சு. பசுமை விகடனுக்கும் மத்த பத்திரிகைகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னன்னா... அதுல வர்ற கட்டுரைகள் எல்லாமே நூறு சதவிகிதம் ஆதாரப்பூர்வமானக் கட்டுரைகள். அதுலயே நமக்கு மேற்கொண்டு தகவல் வேணும்னாலும், அந்த விவசாயிகிட்ட நாமளே தொடர்பு கொண்டு பேச வசதியா போன் நம்பரையும் போட்டுடுவாங்க. நானே பலமுறை இப்படி விவசாயிங்ககிட்ட பேசியிருக்கேன்.

 பசுமை விகடனோட நேரடியான விளைவு என்னனு எங்கயும் தேடி போகவேண்டியதில்ல... நானே நல்ல உதாரணம். பசுமை விகடனால தான் தூரன் நம்பி, புகழேந்தியோட அறிமுகம் கிடைச்சுது. அவங்களாலதான் நானும் இயற்கை விவசாயக் கூட்டுப் பண்ணையில விவசாய நிலம் வாங்கி, ஒரு விவசாயியா ஆக முடிஞ்சுது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்