உலகம் சுற்றும் உழவன்...

ஆகா...அன்னை பூமி சட்டம் ! அக்கம்பக்க அலசல் ஓவியம்: ஹரன், அரச்சலூர் செல்வம்

வீடு, விளைநிலம், விளைச்சல் என்றே நாம் சுழன்று கொண்டிருந்தாலும்... தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்பது போன்ற உலக சட்டங்கள்தான், உள்ளூரில் நாம் உளுந்து விதைப்பதைக்கூட, இன்றைக்கு தீர்மானிக்கின்றன. இதுதான் எதார்த்த நிலை! இத்தகையச் சூழலில், பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகின் பல நாடுகளிலும் நடைபெறும் விவசாயம், விவசாயப் பிரச்னைகள், விவசாய அரசியல், விவசாயப் போராளிகள், இயற்கை நேசர்கள் பற்றிய செய்திகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதே இந்தத் தொடரின் நோக்கம். என்ன... உலகம் சுற்ற புறப்படுவோமா!

'உலகம், மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம்' என்கிற இறுமாப்பு, மனிதர்களில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல, இங்கே இருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிகள் தொடங்கி, பிரமாண்டமாகத் திரியும் யானைகள், திமிங்கலங்கள் வரை அனைத்து ஜீவராசிகளுக்கும் இந்த உலகம் சொந்தம். ஒன்றை பூண்டோடு அழித்து, மற்றொன்று வாழ நினைத்தால்.. அது, 'நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு, அடிமரத்தை வெட்டுவதற்கு சமம்' என்பதை சங்க காலம் தொடங்கி, இன்று வரையிலும் நம்முன்னோர்கள் பாடல்களாக, கதைகளாக, கல்வெட்டுகளாக, ஓலைச்சுவடிகளாக, செவிவழிச் செய்திகளாக இன்னும் பற்பல வடிவங்களாக சொல்லிச் சென்றுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்