‘கடலை தாத்தா’ கார்வர்!

மாத்தி யோசிமண்புழு மன்னாருஓவியம்: ஹரன்

'காந்தி தாத்தா... நிலக்கடலையை விரும்பி சாப்பிடுவார்’ங்கிற தகவலை, பள்ளிக்கூட பாடப் புத்தகத்திலேயே படிச்சிருப்போம். அவரு நிலக்கடலையை சாப்பிட்டதுக்கு முக்கிய காரணம், அவர் பிறந்த குஜராத் மாநிலம், அந்தக் காலத்திலிருந்தே நிலக்கடலை சாகுபடியில, இந்திய அளவுல முன்னிலையில இருக்கிறதுதான். குஜராத்தி உணவுகள்ல நிலக்கடலை அதிகமா இருக்கும். அங்க இருக்கிற 'பரூச்’ நகரத்துக்கு 'இந்தியாவின் நிலக்கடலை நகரம்’னே பேரு உண்டு. இத்தனைக்கும் நிலக்கடலையோட பூர்வீகம் தென்அமெரிக்கா. போர்த்துகீசியர்கள் மூலமாத்தான் இது இந்தியாவுக்கு அறிமுகமாயிருக்கு. முதல்ல பிலிப்பைன்ஸ் நாட்டுல இருக்கிற மணிலா நகரத்துல இருந்து, கப்பல் வழியா நம்ம ஊருக்கு வந்திருக்கு. அதனாலதான், இதுக்கு 'மணிலா கொட்டை’னு பேரு வந்துச்சு. இதைத்தான் மல்லாக்கொட்டை, மல்லாட்டைனு பல மாதிரி சொல்றாங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்