“மதிப்புக்கூட்டினால் 40% கூடுதல் லாபம்”

தென்னை விவசாயிகள் சொல்லும் அனுபவப் பாடம்ம. மாரிமுத்து, படங்கள்: வீ. சக்தி அருணகிரி

ந்தியாவில்  தென்னை சாகுபடிப் பரப்பில் இரண்டாவது மாநிலமாக திகழ்ந்தாலும்... தேங்காய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில்தான் இருக்கிறது தமிழகம். 'தொழில்நுட்பங்களைச் சரியான விதத்தில் பயன்படுத்திக் கொள்ளாதது, நீர் மேலாண்மையில் சறுக்கி இருப்பது, மதிப்புக்கூட்டல் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாதது... ஆகியவைதான் இந்த முரண்பாட்டுக்குக் காரணம்’ என்கிறார்கள், வேளாண் ஆய்வாளர்கள். இவர்கள் சொல்வது உண்மை என்பதை நிரூபிப்பது போல, இந்த விஷயங்களை எல்லாம் சரியாகக் கடைபிடிக்கும் விவசாயிகள், தென்னையில் தெம்பான வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், தேனி மாவட்டம், அம்பாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால்சாமி.

எழுபது வயதிலும், தேனீயைப் போல சுறுசுறுப்பாக இயங்கும் கோபால்சாமி, தேங்காயாக விற்காமல், கொப்பரையாக்கி விற்பதுடன், உரிமட்டை, சிரட்டை ஆகியவற்றின் மூலமும் வருமானம் பார்த்து வருகிறார். அதோடு, தென்னைக்கு இடையில் எலுமிச்சை, கறிவேப்பிலை என ஊடுபயிர் சாகுபடி மூலமும் கூடுதல் வருமானம் பார்க்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்