தேக்கு மரம்... வெட்டுவதில், சிக்கல்... கைகொடுக்கும் தீர்வுகள் !

கு. ராமகிருஷ்ணன்

பிரச்னை

‘தேக்கு மரம் வளர்த்தால், காசு கொட்டும், செஞ்சந்தனம் வளர்த்தால், தங்கம் காய்க்கும், என்பன போன்ற கருத்துக்களை நம்பி, சொந்தத் தோட்டத்தில் எந்த மரங்களை வளர்த்தாலும், கடைசியில், அவற்றை வெட்டி விற்பனை செய்யும்போது, படாதபாடுதான் படவேண்டியிருக்கிறது. குறிப்பாக, தேக்கு உள்ளிட்ட சில மரங்களை வளர்க்கும் விவசாயிகள், வனத்துறையினரின் அலைக்கழிப்பால்... பட்டா நிலத்தில் விளைந்த மரங்களை, சொந்தப் பயன்பாட்டுக்குக்கூட எடுத்துச் செல்லக்கூட முடியாத அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தன்னுடைய தோட்டத்தில் விளைந்த மரங்கள்தான் என்று, விதிகளின்படி வருவாய்த்துறையின் சான்றிதழ் வைத்திருந்தாலும், அவர்களை கெஞ்ச வைப்ப-தோடு, லஞ்சமாக சில பல ஆயிரங்களைப் பெற்றுக் கொண்டுதான் அனுமதியே வழங்குகிறார்கள் வனத்துறை ஊழியர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்