நெல்லி... மதிப்புக்கூட்டினால் மகத்தான லாபம்!

காசி. வேம்பையன் படங்கள்: தே. சிலம்பரசன்

விவசாயிகள் பலரும் தங்களது விளை பொருட்களை அப்படியே சந்தைக்கு அனுப்பி, விற்பனை செய்வதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மதிப்புக்கூட்டி விற்கும்போது, கூடுதல் லாபம் கிடைக்கும் என்று அறிந்துகொள்ளும் விவசாயிகள், மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதோடு நேரடி விற்பனை மூலமாகவும் கூடுதல் லாபம் பார்த்து வருகிறார்கள். இவர்களில் பலரை அவ்வப்போது ‘பசுமை விகடன்’ அடையாளம் காட்டி வருகிறது. இந்த வரிசையில் விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கத்தின் லாபக் கதை இங்கே விரிகிறது. இவர் விளைவிக்கும் நெல்லிக்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்துவருகிறார்.

நெல்லியில் இருந்து தயாரித்த பொருட்களை ‘பேக்’ செய்து கொண்டிருந்த ராமலிங்கத்திடம் பேசினோம். ‘‘நான் பிறந்தது விழுப்புரத்துக்கு பக்கத்துல இருக்குற சே. அகரம். எஸ்.எஸ்.எல்.சி வரைக்கும் படிச்சேன். அதுக்குமேல படிக்க வசதி இல்லை. அதனால அப்பாகூட சேர்ந்து விவசாய வேலைகளைக் கத்துக் கிட்டேன். கல்யாணம் ஆன பிறகு, இந்த ஊர்ல (திருப்பாச்சனூர்) 8 ஏக்கர் நிலம் வாங்கி, நெல், கடலை, கரும்புனு பயிர் வெச்சேன். விவசாயப் புத்தகங்கள்ல படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டு ‘கோலியஸ்’ மாதிரியான மூலிகைப் பயிர்களையும் சாகுபடி செஞ்சேன். போதுமான விளைச்சல் இருந்தாலும், வருமானம் அவ்வளவா இல்லை. அதனால, கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்யலாம்னு மொத்த நிலத்துலயும் சவுக்கு நட்டுவெச்சுட்டு, சென்னைக்குப் போயிட்டேன். பிள்ளைங்க படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகு, கிராமத்துக்குத் திரும்பின நான், சவுக்கு மரங்களை வெட்டி வித்துட்டு, பழையபடி விவசாயத்தை ஆரம்பிச்சுட்டேன்’’ முன்கதை சொன்ன ராமலிங்கம் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்