உருமாலைக்குள்ள ஒளிஞ்சிருக்குது, ரகசியம்!

சோழ மன்னர்களுக்கு, பட்டாபிஷேகம் நடக்கும்போது, முதல்ல செங்கோல் தரமாட்டாங்க. புரசை மரக் குச்சியைக் கொடுத்து, சங்குல தண்ணி எடுத்து பட்டாபிஷேகம் செய்வாங்களாம். இதுக்கு ‘சங்கதாரா’னு பேரு. அரசுப் பொறுப்புக்கு வரும்போது. தங்கத்துல செய்த செங்கோலைவிட, புரசை மரத்தை உயர்வா நினைச்சு பயன்படுத்தியிருக்காங்க. இந்த விஷயம் பத்தின தகவலை கல்வெட்டுல செதுக்கி வெச்சிருக்காங்க. இந்த புரசு மரத்துக்கு, பலாசம், முறுக்கன்னு வேற பேருங்களும்கூட உண்டு. ஒரு காலத்துல சோழ மண்டலத்துல இந்த இலையிலதான் எல்லாருமே சாப்பிடுவாங்க. இதுல சாப்பிட்டா, கல்வி அறிவு பெருகும்னு நம்பிக்கை. இலையில இருக்கற அரிய வகை சத்து, சூடான சாப்பாட்டை அதுல பரிமாறுறப்ப, சாப்பாட்டோட சேர்ந்து நமக்கு கிடைச்சு, ஞாபக சக்தியை அதிகப்படுத்துமாம்.. ஆயுர்வேத மருந்து தயாரிக்க, இந்த மரத்தோட அத்தனை பாகத்தையும் பயன்படுத்துறாங்க.

சப்போட்டா பழம் அறுவடை செய்யுற நேரம் இது. காலை நேரத்துல சப்போட்டா காயில, அதிகமா பால் இருக்கும். அதனால, சாயந்திர நேரத்துல அறுவடை செய்யலாம். அதிக பாலோட காயைப் பறிச்சு பழுக்க வெச்சா, சரிவர பழுக்காது. பறிச்ச காய்களை, சாக்குபடுதா மேல பரப்பி, இளம்வெயில்ல அரை மணி நேரம் வெச்சா, காய்ல உள்ள பால் குறைஞ்சிடும். அப்புறமா, சாக்குப்பையில இறுக்கமா கட்டி வெச்சிட்டா, மூணு, நாலு நாள்ல பழுத்துடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்