இயற்கை விவசாயக் கூட்டமைப்பு..!

இணைந்த ஆர்வலர்கள்!

ம்மாழ்வார் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியவை என்று நினைத்த, செய்து கொண்டிருந்த பணிகள் பல. அவற்றை எடுத்துச் செய்ய, அவர் கனவு கண்ட வளமான தமிழகத்தை, அவர் வழியில் மேலெடுத்துச் செல்ல அவருடன் தொடக்க காலம் முதல் இறுதிக் காலம் வரை இணைந்து இயங்கியவர்கள் ஒன்றிணைந்து ‘இயற்கை விவசாயக் கூட்டமைப்பு’ என புதிய அமைப்பை அமைத்துள்ளனர்.

அப்படிப்பட்ட 45 நபர்கள் கூடி, ‘அடுத்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் இயற்கை விவசாயம் இருக்க வேண்டிய இடம்' என்ற தலைப்பில் கடந்த ஜூலை 12-ம் தேதி திருச்சியில் கூடி ஆலோசனை நடத்தினர். ‘குடும்பம்' ஆஸ்வால்டு குவிண்டால், பெரியநாயக சாமி, ‘அகிம்சா’ விக்டர், ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், ‘பூச்சியியல் வல்லுநர்’ செல்வம், ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்