வாட்ஸ்ஆப் பராக்... பராக்!

விரல் நுனியில் உலகம் சுருங்கி விட்டது. ‘ஸ்மார்ட் போன்’ எனும் அற்புதம் மூலமாக நல்ல பல விஷயங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. கண்ணுக்குத் தெரியாமல் இருந்த பல விஷயங்கள், தற்போது வெளிச்சத்துக்கு வந்து பலரையும் விழிப்படையச் செய்து கொண்டிருக்கின்றன, பலருக்கு பலன்களையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றன. ஏன், அநியாயக்காரர்களை அலறவும் வைத்துள்ளன.

இதையெல்லாம் ‘ஸ்மார்ட் போன்’ மூலமாக சாத்தியமாக்கியிருக்கிறது ‘வாட்ஸ்ஆப்’!

இதே ஆயுதத்தை நீங்களும் கையில் ஏந்தி, விவசாயத்தில் நடக்கும் புதுமைகள், சாகுபடி நுட்பங்கள், நல்ல விளைச்சல் பெற்ற விவரங்கள், தடங்கலாக நிற்கும் பிரச்னைகள் மற்றும் பூச்சி-நோய்த் தாக்குதல்கள்,  அவற்றுக்கு எதிராக நீங்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய தொழில்நுட்பம் என்று அனைத்தையும் போட்டோ, செய்தி, வீடியோ என்று உடனுக்குடன் வாட்ஸ்ஆப் மூலம் எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். பசுமை விகடனுடன், பகிர்ந்து கொள்ள விரும்பும் பிற விஷயங்களையும் தாராளமாகப் பகிரலாம்.

உங்களின் வாட்ஸ்ஆப் 99400-22128 என்ற எண்ணுக்கு வந்து சேரவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் உங்களின் வாட்ஸ்ஆப் தகவல்கள், விகடன் இணையதளம், ஃபேஸ்புக் மற்றும் பசுமை விகடன் இதழிலிலும் வெளியாகும். சிறந்த, பயனுள்ள பதிவுகளுக்கு தக்க பரிசு உண்டு!

உங்களிடமிருந்து ஏரளமான தகவல்கள் வந்து குவிகின்றன. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதிவுகள் இங்கே இடம் பெறுகின்றன.


யார் இந்த நாட்டில் ஏழை விவசாயி?

மோடி அரசு 400 கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த ஏழை விவசாயி விஜய் மல்லையா இவர்தான்.

சுட்டெரிக்கும் கடும் வெயிலில், வியர்வை சிந்தி... கால் வயிற்றுக் கஞ்சியோடு... இவர் விவசாயம் செயது கொண்டு இருந்தபோது எடுத்தபடம்.

-பசுமை நேசன், திருக்கழுக்குன்றம்.


மாத்தி யோசிச்சேன்!

-ஏ.தனபால், ஈரோடு


பைகளில் கீரை வளர்க்கும் முறை!

பழைய பிளாஸ்டிக் சிமென்ட், அரிசி சாக்குகளை உட்புறமாக பாதியளவு மடித்துக் கொள்ளவும். இதில் தலா ஒருபங்கு தேங்காய் நார்க்கழிவு+மணல்+மண்புழு உரத்தை இட்டு நிரப்பவும். பிறகு கீரை விதைகளைத் தூவி தண்ணீர் தெளித்து வந்தால், 4 நாட்களில் விதை முளைத்து வந்துவிடும். இதில் போட்டிருப்பது வெந்தயக் கீரை. இதை15 நாட்களுக்குள் அறுவடை செய்துவிடலாம்.

-கலையரசு, திருச்சி.


சின்ன இடம் பெரிய தோட்டம்!

எம்.கணபதி, மேட்டுப்பாளையம்


பந்தலிலும் தர்பூசணியை வளர்க்கலாம்!

ஆர்.லதா, திண்டிவனம்.

வாட்ஸ்ஆப்/ வாசகர்கள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick