தண்ணீர்...தண்ணீர் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிலைகுலைந்துள்ள நிலத்தடி நீர்...உயர்த்த உருப்படியான யோசனைகள்!நீர் மேலாண்மைஆர்.குமரேசன், படம்: டி.ஆரோன் பிரின்ஸ் காட்ஸன் 

மிழகம் முழுக்க போதுமான மழை அனைத்துப் பகுதிகளிலும் கிடைத்துள்ளது. ஆனால், 'அந்தத் தண்ணீரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வழிகள் இருக்கிறதா?’ என்றால், 'இல்லை’ என்ற பதில்தான் வரும். நீர்ச்சேமிப்புக்கு பலரும் பல யோசனைகளை முன்வைத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால், 'அரசின் கவனத்துக்குச் செல்கிறதா?’ என்பது தெரியவில்லை. விவசாயிக்குத்தான் தெரியும்... தண்ணீரின் தேவையும், அவசியமும். இங்கு, விவசாயிகளுக்கும் அரசுக்கும் சில யோசனைகளை முன்வைக்கிறார், தமிழ்நாடு பாரதீய ஜனதாதள நீர்வளக் கழகத்தின் தலைவர் மாணிக்கம். 'நமக்குத் தேவையான மழை, ஆண்டுக்கு ஆண்டு பெய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் விவசாயம், குடிநீர் இரண்டுக்கும் தண்ணீர் இல்லை என்று மன்றாடி வருகிறோம். அரசு, நீராதாரத்துக்கென்று உருப்படியான வழிகளைக் கையாண்டதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரம் ஆறுகள்தான். இதையடுத்து ஏரி, குளம், குட்டைகள் வரும். ஒரு சில ஆறுகளைத் தவிர மற்ற ஆறுகளில் ஆண்டு தவறாமல் தண்ணீர் கிடைத்து வருகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் வனங்களில் மழை பெய்தாலும், நமக்கு வேண்டிய தண்ணீர் கிடைத்து விடுகிறது. இது முழுமையாகக் கிடைக்காவிட்டாலும் கூட, கிடைக்கும் நீரையும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்