அவசர மோடியும்... அநியாய சட்டமும்!

சாட்டைதூரன் நம்பி

டிமை இந்தியாவில் 1864-ல், அரசுக்கோ, அரசு ஆதரவு பெற்ற தொழில் அதிபர்களுக்கோ நிலம் வேண்டும் என்றால், உடனே அந்த நிலத்தை அபகரிப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கொண்டு வந்தது ஆங்கில அரசு. அதன்படி, அரசு நினைத்தால், எந்த நிலத்தையும் எப்பொழுது வேண்டுமானாலும் பறிக்க முடியும். நில உரிமையாளர்களால் தடுக்க முடியாது. அரசு கொடுக்கும் இழப்பீட்டுத் தொகை போதவில்லை என்றால், மட்டும்தான் நீதிமன்றத்துக்குச் சென்று, இழப்பீட்டைக் கூட்டிக் கேட்க முடியுமே தவிர, தடுக்க முடியாது.

இப்படியொரு சட்டத்தை வைத்துக் கொண்டு, சுதந்திரம் பெற்ற பிறகும் விவசாயிகளை அடிமையாகவே வதைத்துக் கொண்டிருந்தனர், ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்களும்... தொழில்அதிபர்களும். இதனால், 'இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் ஒரு நூற்றாண்டு காலமாக விவசாயிகள் போராடி வந்தார்கள். அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பதுபோல, எதற்குமே அசையாத கடந்த கால காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, தேர்தல் நேரத்தில் மெள்ள அசைந்தது. 'நிலம் கையகப்படுத்துதல், மற்றும் மறுகுடி அமர்வு, மறுவாழ்வு’ என்று பெயரிடப்பட்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் விவசாயிகளாகிய எங்களுக்கு முழுதிருப்தி இல்லை என்றாலும், சாதகமான சில அம்சங்கள் இடம்பெற்றிருந்தது திருப்தியைக் கொடுத்தது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்