‘‘விவசாயப் புரட்சி ஆய்வகங்களில் நடப்பதில்லை..!”

த.ஜெயகுமார், படங்கள்: பா.அருண்

'நேஷனல் அக்ரோ ஃபவுண்டேஷன்’ தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் மத்திய வேளாண்துறை அமைச்சர் சி. சுப்ரமணியத்தின் 105-வது பிறந்த நாள் விழா, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த இல்லீடு கிராமத்தில் உள்ள பயிற்சி வளாகத்தில் நடைபெற்றது. ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர்.

 நிகழ்ச்சியில், தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகர் பேசும்போது, 'அந்தக் காலத்தில் அமெரிக்க அதிபர்கள் எவரையும் அவ்வளவு எளிதில் சந்தித்துவிட முடியாது. ஆனால், என் தந்தை சி.சுப்ரமணியம், 1964-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்சனை சந்தித்து 10 நிமிடங்கள் வாய்ப்பு கேட்டு, 2 மணிநேரம் பேசினார். அதன்பிறகு இந்திய உணவு உற்பத்தியில் போதுமான தன்னிறைவைப் பெற்றோம். இந்த ஃபவுண்டேஷன் மூலமாகத் தொடர்ந்து இப்பகுதி விவசாயிகளுக்கு உதவி வருகிறோம்'' என்று சொன்னார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்