மானிய விலையில் சோலார் டிரையர்!

ஓவியம்: ஹரன்

டைப்பாலத்தின் மீது அமர்ந்து, செய்திதாள்களை மேய்ந்துவிட்டு, யாரிடமாவது கொட்டிவிடும் ஆவலில் சுற்றும்முற்றும் பார்த்தார் 'வாத்தியார்’ வெள்ளைச்சாமி. வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த 'ஏரோட்டி’ ஏகாம்பரம் கண்ணில் படவும், அவரை அழைக்க வாய்திறந்த நேரத்தில்... தொலைவில் கூடையுடன் 'காய்கறி’ கண்ணம்மா, கண்ணில்பட்டார். 'ஆகா, பேசுறதுக்கு ஆள் கிடைச்சாச்சு’ என்று சொல்லிக்கொண்டே வந்த வாத்தியார், காய்கறி அருகில் வரவும், ''என்ன கண்ணம்மா காலையிலயே வியாபாரத்துக்குக் கிளம்பியாச்சா?'' என்று இழுவையைப் போட்டார்.

 ''ஆமாய்யா... உங்களுக்கென்ன சும்மாவே உக்காந்து கிடக்கலாம். பென்ஷன் வந்துக்கிட்டிருக்கு. ஆனா, எங்க பொழப்புதான் நாய் பொழப்பாச்சே. நாலு தெரு அலைஞ்சு திரிஞ்சாத்தான் வயித்தை வளர்க்க முடியும்'' என்று சொன்ன காய்கறி,''ஆமா, நீங்க மட்டும் தனியா உக்காந்து இருக்கீங்க. உங்க கூட்டாளி அங்க வேலைபாத்துக்கிட்டு இருக்காரு. உங்களுக்குள்ள ஏதாவது மனஸ்தாபமா?'' என்ற கேள்வியை வீசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்