‘காங்கிரஸ், பி.ஜே.பி, கருணாநிதி, ஜெயலலிதா யாரையும் நம்பாதீங்க!’

காவிரிப் போரில் சாட்டை வீசும் அய்யர்போராட்டம்

'காவிரியின் குறுக்கே புதிய அணைகளைக் கட்டியே தீருவோம்’ என பிடிவாதம் பிடிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக எந்நேரமும் போராட்டத் தீ கொளுந்துவிட்டு எரிந்த படியே இருக்கிறது டெல்டா பிரதேசமான தஞ்சை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில்! அனைத்து அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி, புதிய அணைக்கு எதிராகப் போராடி வருகின்றன.

ஏற்கெனவே மாவட்டங்கள் தழுவிய அளவில் கடையடைப்பு நடத்தப் பட்டிருக்கும் நிலையில், டிசம்பர் 7 அன்று தே.மு.தி.க தொண்டர்கள் சுமார் ஆயிரம் பேர் தஞ்சாவூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினார்கள். மறுநாள் 8-ம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான தொண்டர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டிசம்பர் 12-ம் தேதி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் பிரசாரப் பயணம் ஆரம்பமாகியிருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதியன்று நடிகர் சரத்குமார் தலைமையில், அவருடைய சமத்துவ மக்கள் கட்சியினர் கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்