‘நன்றியைச் சுமக்க மறுப்பார்!’

வரலாறுஓவியம்: ஹரன்

ரோடு மாவட்டத்தை மையமாகக் கொண்டு நாடு முழுக்க சுற்றிச் சுழன்று வந்த நம்மாழ்வாரை, 'சுனாமி’ வந்து நாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிக்கு அழைத்துச் சென்றது.

2004, டிசம்பர் 26-ம் நாள்..இந்தோனேஷியா அருகே ஏற்பட்ட பூகம்பத்தின் விளைவாகப் புறப்பட்ட சுனாமி அலைகள், தமிழகக் கடற்கரைப் பகுதிகளையும் தாக்கின. பல்லாயிரக்கணக்கில் மக்கள் மடிந்தனர். பல நூறு ஏக்கர் நிலங்களும் சுனாமியின் தாக்குதலுக்கு பலியாயின. மக்களும், கடற்கரைப் பிரதேசமும் அலைகளால் பாதிக்கப்பட்டதை அறிந்து... துடிதுடித்து உதவ ஓடினார் நம்மாழ்வார். கடல் நீர் விவசாய நிலத்தில் புகுந்துச் சென்றதால், அந்த நிலங்கள் அத்தனையும் உப்புப் படிந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி இருந்தது. நம்மாழ்வாரின், ஆராய்ச்சி அறிவுக்கு இங்கே வேலை வந்தது. மண்டையைக் குடைந்தார், சுற்று வட்டார மக்களுடன் பேசினார், கடைசியில் உப்புப் பிரச்னைக்கு எளிய தீர்வைக் கண்டார். ஆம், சணப்பு, தக்கைப்பூண்டு, கொழிஞ்சி போன்ற உரச்செடிகள் உப்புத் தன்மையை இழுத்துக் கொண்டு, மண்ணை வளப்படுத்தும் வித்தையை பல விவசாயிகளுக்கும் கற்றுக் கொடுத்தார். நாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு, சுற்று வட்டாரங்களில் மண்வள மீட்புப் பணிகளைச் செய்தார். இந்த நுட்பம், சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் நம்மாழ்வாரைப் பின்பற்றுவோர் மூலமாகப் பரவியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்