செழிப்பு... விவசாயத்துக்குத்தான், விவசாயிகளுக்கு அல்ல!

அலசல்தேவேந்திர சர்மா, தமிழாக்கம்: அறச்சலூர் ரா.செல்வம்

'ய்யகோ... உணவுப்பொருள் உற்பத்தி குறைந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்’ என்பது போன்ற பொய்யான பரப்புரைகள் வழக்கம் போல சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு நடுவே, 'உணவு உற்பத்தி வழக்கத்தைவிட கடந்த 2013-14 ஆண்டில் அதிகரித்திருக்கிறது’ என்கிற அரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள்... தெம்பைத் தருகின்றன. ஆக, விவசாயத்தைப் பொறுத்தவரை இது செழிப்பான விஷயமே. ஆனால், விவசாயிகளுக்கல்ல! ஆம், கடந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் (2013-14), மழை குறைவாகப் பெய்திருந்தாலும், விளைச்சலுக்குக் குறைவில்லை. ஆனால், இந்த அதிக விளைச்சல், விவசாயிகளுக்குப் பணமாக மாறவில்லை என்பதுதான் தொடரும் சோகம்.

கடந்த ஆண்டில், 264.4 மில்லியன் டன் உணவு தானியங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன. எண்ணெய் வித்துக்கள், மக்காச்சோளம், பருத்தி, பயறு வகைகளிலும் சாதனை விளைச்சல்தான். எண்ணெய் வித்துக்கள் கடந்த 2012-13-ம் ஆண்டைவிட, 4.8% அதிகம் என்கிற வகையில் 34.5 மில்லியன் டன் அளவுக்கு விளைந்துள்ளன. மக்காச்சோளமோ 24.2 மில்லியன் டன் அளவுக்கு விளைந்துள்ளது. இதுவும் 8.52% அதிகம். பயறு வகைகள், முன் எப்போதும் இல்லாத அளவில் 19.6 மில்லியன் டன் விளைவிக்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட 7.10% அதிகம். பருத்தியிலும் சாதனை விளைச்சல்தான். மழை குறைந்திருப் பினும் அதிகம் விளைவித்துத் தந்ததன் மூலம் நாடு, விவசாயிகளுக்குக் கடன்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்