வளமும், பலமும் பெறுவோம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது’ என்ற வாசகம் சிறுதானியங்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஒரு காலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு... போன்ற சிறுதானியங்களே அன்றாட உணவாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் சிறுதானியங்கள் சாகுபடி குறுகியது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரைக் கூட சிறுதானிய உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றால், தேடி அலையவேண்டும். வரகு, சாமை... போன்ற சிறுதானியங்களைப் பார்க்க வேண்டும் என்றால், பல நூறு மைல் பயணம் செய்யவேண்டும். இந்நிலையை மாற்ற ‘பசுமை விகடன்’ முதல் இதழ் தொடங்கி, இப்போது உங்கள் கைகளில் தவழும் இதழ் வரை சிறுதானியங்களின் மகத்துவத்தை விதைத்து வருகிறோம். இப்போது ‘கையேந்தி பவன்’ தொடங்கி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை விதவிதமான சுவையான சிறுதானிய உணவுகள் பரிமாறப்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்