மெத்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை... அச்சத்தில் விவசாயிகள்!

ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பு இல்லை என்கிறது தமிழக அரசு. இதற்குப் பிறகு திறந்தாலும் எங்கள் பகுதிக்கு இப்போதைக்கு தண்ணீர் வர வாய்ப்பே இல்லாமல் செய்துவிட்டது நெடுஞ்சாலைத்துறை’’ என குற்றம்சாட்டுகிறார்கள், தஞ்சாவூர் மாவட்டம், கல்யாண ஓடை ஆற்றுப்பாசன விவசாயிகள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய வெண்டாறுக்கோட்டை படுகைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வீரசேனன், “ஜனவரி மாத இறுதியில் மேட்டூர் அணை மூடப்படுவது வழக்கம். ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டுவதாக இருந்தால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பணியைத் தொடங்கி, ஜூன் முதல் வாரத்துக்கு முன்பாகவே நிறைவு செய்துவிட வேண்டும். இதுகுறித்து பிப்ரவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கூடச் சொல்லியிருந்தோம். ஆனாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாகவே செயல்படுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்