கூட்டுக் குடிநீருக்கு வேட்டு வைக்கும் கோக்!

காவிரி டெல்டா விவசாய நிலங்களைக் காவு வாங்க காத்திருக்கும் மீத்தேன் எமனைப்போல, ஈரோடு மாவட்ட விவசாய நிலங்களைக் காவு வாங்க பவானிக் கரையில் காத்திருக்கிறது பன்னாட்டு பகாசுர கம்பெனியான கோக். பெருந்துறையில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்தினுள், 77 ஏக்கர் பரப்பளவில் கோக் தொழிற்சாலை அமைப்பதற்கான ஆயத்த வேலைகள் நடந்து வரும் நிலையில், ‘இதனால் குடிநீர்த் தேவை பாதிக்கப்படுவதுடன், ஆலைக்கழிவுகளால் சுற்றுச்சூழலும் மாசுபடும்’ என்றபடி போராட்டத்தைத் துவக்கியுள்ளனர் இப்பகுதி மக்கள். ஆர்ப்பாட்டம், கடையடைப்பு என நாள்தோறும் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது போராட்ட களம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்