கோ...கோ... கோகோ கோலா..!

உரிமத்தை ரத்து செய்ததில் உள்குத்தா...?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான கோக் நிறுவனம்... குளிர்பானத் தொழிற்சாலை ஒன்றை அமைக்க, சிப்காட் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக, சிப்காட் வளாகத்தில் உள்ள 71 ஏக்கர் நிலத்தை 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்குக் கொடுப்பதோடு, காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலிருந்து ஒரு நாளுக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீரையும் தொழிற்சாலைக்கு வழங்குவது எனவும், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும் பொதுமக்களும், ‘எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கும் இந்த ஆலைக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கோரி உண்ணாவிரதம், கடையடைப்பு, மறியல் என்று பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் கோக் ஆலைக்கு வழங்கப்பட்ட உரிமத்தை, கடந்த 20-ம் தேதி திடீர் என ரத்து செய்தது, தமிழக அரசு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்