மரத்தடி மாநாடு: யானைகளை விரட்ட சிவப்பு விளக்கு!

சித்திரை முதல் நாள் என்பதால், மாடுகளைக் குளிப்பாட்டி புதுக்கயிறு கட்டி, அரிசி-வெல்லம் கலந்து வைத்து படையலிட்டு... சாமி கும்பிட்டு, நல்லேர் பூட்டி நிலத்தில் ஓட்டிக் கொண்டிருந்தார், ‘ஏரோட்டி‘ ஏகாம்பரம். ‘வாத்தியார்’ வெள்ளைச் சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் வரப்போர தென்னை மரத்தடியில் ஏரோட்டியின் வருகைக்காகக் காத்திருந்தனர். சம்பிரதாயங்களை முடித்து வந்த ஏரோட்டி, மாடுகளை நிழலில் கட்டி சிறிது தீவனத்தை எடுத்துப் போட்டுவிட்டு... துரட்டி மூலம் சில இளநீர் காய்களைப் பறித்து ஆளுக்கு ஒன்றாக சீவிக்கொடுத்தார்.

அதைப் பருகிக் கொண்டே, ‘‘வருஷ ஆரம்பத்துலேயே பல இடங்கள்ல உழவு போடுற அளவுக்கு கோடை மழை பெஞ்சிடுச்சு. இன்னும் ரெண்டு, மூணு மழை கிடைச்சா... ரொம்ப நல்லா இருக்கும். நல்லா களை அழியுற அளவுக்கு உழவு ஓட்டிப்புடலாம். பூச்சித் தொந்தரவும் இல்லாமப் போயிடும்’’ என்று உற்சாகம் பீறிடச் சொன்னார் ஏரோட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்