சர்க்கரை விலை வீழ்ச்சி... காரணம் யார்?

‘சர்க்கரை ஆலைகளின் சங்கட நிலை-சில உண்மைகள்’ என்ற தலைப்பிட்டு முன்னணி நாளிதழிகளில் தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் சார்பில் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அபினாஷ் வர்மா, சென்னையில் பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து, தமிழக அரசுக்கும், விவசாயிகளுக்கும் எதிராக சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். இது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய நெல்லிக்குப்பத்தை சேர்ந்த முன்னோடி கரும்பு விவசாயி கோதண்டராமன், “சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்திலும், பேட்டிகளிலும் மாநில அரசை மட்டுமே குற்றம்சாட்டி இருக்கின்றனர். மத்திய அரசைப் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை. சர்க்கரைக்கான ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றுக்கு வரி விதிப்பது, அனுமதி கொடுப்பது, கரும்புக்கான விலை அறிவிப்பது என எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், முழுக்க முழுக்க மாநில அரசைக் குறைகூறிக் கொண்டிருக்கின்றன ஆலைகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்