ராஜஸ்தானின் தண்ணீர் ராஜா..!

குறுந்தொடர்-3

மீண்டும் ஓடிய அர்வாரி நதி!

ராஜேந்திர சிங், கோபால்புராவில் தன்னுடைய வேலைகளைத் தொடங்கியபோது, அந்தப் பகுதி முழுக்கவே வறட்சி நிலவியது. கண்மண் தெரியாமல் அருகிலிருந்த ‘சரிஸ்கா தேசிய பூங்கா’வில் கடத்தல்காரர்கள் மரங்களை வெட்டியதும், அதே பகுதியில் மிக அதிகமான சுரங்கங்கள் இருந்ததும் வறட்சிக்கு முக்கியக் காரணம். மக்களும் பாரம்பர்ய குளங்களையும், ஏரிகளையும் கண்டுகொள்ளாமல், அதிக அளவில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சியிருந்தனர். கோபால்புராவில் இருக்கும் அல்வார் மாவட்டம், அரசாங்கத்தால் நிலத்தடி நீர் வற்றிய கறுப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியைச் சுற்றிலும் ராஜேந்திர சிங் கண்ட வறட்சி அவரைத் தூங்க விடவில்லை. ‘ஜோஹாட்’ போன்ற பாரம்பர்ய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலத்தடி நீரை மேம்படுத்தினாலொழிய அந்தப் பகுதிக்கு விமோசனமில்லை என்று ராஜேந்தருக்கு தெளிவாகத் தெரிந்தது. கோபால்புராவில் கிடைத்த மக்கள் ஆதரவு, அவரை உற்சாகப்படுத்த... 1986-ம் ஆண்டு அந்தப் பகுதியிலிருந்த கிராமங்கள் வழியாக குளங்களையும், தடுப்பணைகளையும் கட்டச் சொல்லி, பிரசார நடைப்பயணம் மேற்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்