மண்புழு மன்னாரு: ‘நண்பேன்டா’ எலிகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தி யோசி, ஓவியம்: ஹரன்

சில வருஷத்துக்கு முன்னால ஆந்திராவுல நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டுல இருந்து விஞ்ஞானிங்க நாலு பேரு வந்திருந்தாங்க. அந்த சமயத்துல ஆந்திர மாநில நெல் வயல்கள்ல, எலித்தொல்லை அதிகமா இருக்குனு உள்ளூர் இங்கிலீஸ் நியூஸ் பேப்பர்ல பெருசா செய்தி போட்டிருந்தாங்க. இதைப் படிச்ச இந்தோனேசிய விஞ்ஞானிங்க, எலிகள் பத்தின தங்களோட அனுபவங்கள தனிப்பட்ட முறையில பேசிக்கிட்டிருந்தப்ப எங்ககிட்ட எடுத்து வெச்சாங்க. அவங்க சொன்ன தகவல்கள் ஆச்சர்யத்தை வரவழைக்கிறதா இருந்துச்சு.

‘எலிகளை அழிக்க முடியாது, எண்ணிக்கையை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாம். எலிகளைக் கொல்வதற்கு விஷம் வைப்பதைவிட, எலிப்பொறிகள் வைக்கலாம். நெல் வயலைச் சுற்றிலும் புதினா கீரையை வரப்புப் பயிராக சாகுபடி செய்வது போன்ற எளிய முறைகளைப் பின்பற்றலாம். எங்கள் நாட்டிலும், எலிகள் தொந்தரவு அதிகம்தான். ஆனால், அதை யாரும் விஷம் வைத்துக் கொள்வதில்லை. எலிகளின் எண்ணிக்கையைக் குறைக்க, எங்கள் நாட்டில் உள்ள சில மாநில அரசாங்கங்கள் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தின. புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதி சார்பில் 400 எலிகளைப் பிடித்துத் தர வேண்டும். மாப்பிள்ளையும், பெண்ணும் தலா 200 எலிகளைப் பிடித்துக் கொடுத்தால்தான் திருமணப் பதிவுச் சான்றிதழ் கொடுக்கப்படும் என்று அறிவித்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம், எலிகள் மூலம் பயிர்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்க, ஊர் கூடி வேலை செய்ய வேண்டும் என்பதை உணர்த்தத்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்