ஆஸ்பத்திரி செலவைக் குறைக்கும் வீட்டுத்தோட்டம்!

வீட்டுத்தோட்டம்சா.கவியரசன்

*மூலிகை, காய்கறி, கீரை, பழங்கள் அனைத்தும் விளைகிறது.
 
*மாதாந்திர காய்கறிச் செலவு குறைகிறது.
 
*உடல் ஆரோக்கியத்துடன் கூடிய மனநிம்மதி.

ம் குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்துகொள்ளும் விதமாக வீட்டுத்தோட்டங்கள் அமைத்து வருகிறார்கள் பலரும். அந்த வகையில், தனது வீட்டின் தரைப்பகுதியில் புறக்கடைத் தோட்டம் அமைத்து காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட சாகுபடியை இயற்கை முறையில் மேற்கொண்டு வருகிறார் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள அலங்கியம் பகுதியைச் சேர்ந்த பிரேமா நடராஜன்.

மாலைவேளையில் வீட்டுத்தோட்டத்தில் அவரைச் சந்தித்தோம். உடன் இருந்த தாயார் மற்றும் சகோதரியை அறிமுகம் செய்து வைத்து விட்டு பேசத்தொடங்கினார் பிரேமா.

‘‘நான் பிறந்து வளர்ந்தது ஓசூர். கல்யாணத்துக்குப் பிறகு வாழ்ந்த ஊர் சேலம். அரசு ஊழியரான கணவரின் பணி ஒய்வுக்குப் பிறகு அவரோட சொந்த ஊரான அலங்கியம் வந்திருக்கோம். சின்ன வயசில் இருந்தே எனக்கு விவசாயத்தின் மீது தீராத ஆர்வம். விவசாயம் சம்பந்தமான எந்தப் புத்தகம் கண்ணில் பட்டாலும் அதை வாங்கி படிச்சிடுவேன். எப்பவும் புத்தகமும் கையுமாகவே இருப்பேன். படிச்சு முடிச்ச புத்தகங்களைச் சேகரிச்சும் வெச்சிருக்கேன். அதை மறுவாசிப்பு செய்ற வழக்கமும் உண்டு. எதிர்காலத்தில் நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்ங்கிற கனவு என் மனசுல ஒடிக்கிட்டே இருந்திச்சு. அந்த சமயத்தில்தான் ‘பசுமை விகடன்’ அறிமுகம் ஆச்சு. அதுல வந்த கட்டுரைகள் என்னை ரொம்பவும் ஈர்த்திடுச்சு. விவசாயம் செய்யணும்ங்கிற கனவில் இருந்த என்னை, இயற்கை விவசாயம் செய்தே ஆகணும்ங்கிற வெறியை ஏற்படுத்துனது ‘பசுமை விகடன்தான்’. திருப்பூர், உடுமலைப்பேட்டை, கொடுவாய்னு பக்கத்துல நடந்த இயற்கை விவசாயக் கருத்தரங்குகள்ல கலந்துக்கிட்டு பல தகவல்களைச் சேகரிச்சேன். அதில் இயற்கை விவசாயம், வீட்டுத்தோட்டம் பற்றியும் தெரிஞ்சுக்கிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்