விலை வீழ்ச்சியில் உருண்டை வெல்லம்...

வேதனையில் விவசாயிகள்..!கே.பாலசுப்பிரமணி, படங்கள்: வீ.சக்தி அருணகிரி

*ஒரு டன் கரும்புக்கு 110 கிலோ உருண்டை வெல்லம் கிடைக்கும்.

*42 கிலோ உருண்டை வெல்லம் கொண்ட சிப்பம் 1,100 ரூபாய்

*வெல்லத்தில் செய்த பலகாரங்களை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

*ஆலைகளின் ஆதிக்கத்தைத் தடுக்க வெல்லப் பயன்பாடு அதிகரிக்க வேண்டும்!

ரும்பில் இருந்து தயாரிக்கப்படும் உருண்டை வெல்லம் அல்லது மண்டை வெல்லத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துகொண்டே இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு உருண்டை வெல்லம் என்ன விலை விற்றதோ அந்த விலைதான் இப்போதும் இருக்கிறது. உருண்டை வெல்லத்துக்கான தயாரிப்புச் செலவுகள் அதிகரித்திருக்கும் நிலையில் அதன் விலை வீழ்ச்சி விவசாயிகளைக் கவலை அடைய வைத்துள்ளது.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம்தான் உருண்டை வெல்லத்தை சந்தைப்படுத்துவதில் முக்கிய இடமாக இருக்கிறது. எனவே, தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் கரும்பு விவசாயிகள், கரும்பை அறுவடை செய்து அதில் இருந்து உருண்டை வெல்லம் தயாரிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்