‘நம்ம கடை!’

கல்லூரியில் ஒர் இயற்கை அங்காடி பெ.மதலை ஆரோன்

ல்லூரி மாணவர்கள் என்றாலே பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளைத்தான் விரும்பி உண்பார்கள். அவர்களின் தேவைக்கேற்பவே கல்லூரிகளில் உணவகங்களும் செயல்படும். அதற்கு நேர்மாறாக, வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பாரம்பர்ய உணவுகளின் அருமைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கில்... ‘நம்ம கடை’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மாணவர்களும் பாரம்பர்ய உணவை விரும்பி உண்கிறார்கள்.

அக்கல்லூரிக்கு நாம் சென்ற போது... ‘அன்னம் எப்படியோ, எண்ணம் அப்படியே!’, உணவின் தூய்மை உணர்ந்து, வாழ்வை எளிமையாக்கும் உன்னதப் பாதை, சிறுதானிய உணவு முறையில் பொதிந்துள்ளது’ - என்ற ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரின் வரிகள் அடங்கிய பெயர் பலகை நம்மை வரவேற்றது. மாணவர்கள் தினை, சாமை, வரகு, கேழ்வரகு, கம்பு, சோளம் என சிறுதானியங்களில் சமைக்கப்பட்ட தின்பண்டங்களை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்