நீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி, படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘‘சின்னவெங்காயத்தை விதைகள் மூலம் நடவு செய்யலாமா? இதனால் என்ன நன்மைகள்?’’

மா.வ.செளந்தரராஜன், திருச்சிராப்பள்ளி.

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறையின் தலைவர் முனைவர்.ஆறுமுகம் பதில் சொல்கிறார்.

சின்னவெங்காயத்தைப் பொறுத்தவரை எங்கள் பல்கலைக்கழகத்தில் பல ரகங்களை வெளியிட்டுள்ளோம். தற்சமயம் கோ.ஆன்-5 என்ற ரகம் விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

சின்னவெங்காயம் சாகுபடி செய்ய, ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன், ஜூலை மாதங்கள் ஏற்றவை. காரணம், மழை பெய்யும் காலங்களில் வெங்காயம் வயலில் இருந்தால் அழுகிவிடும். அதைத் தவிர்க்கவே, குறிப்பட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்துவருகிறோம்.

இந்த ரகத்தில் விதை உற்பத்தி செய்ய முடியும் என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளின் சுற்று வட்டாரங்களில் நிலவும், தட்ப வெப்பநிலையில் மட்டுமே பூக்கள் பூத்து விதைகள் உருவாகின்றன. வெங்காய விதைகளை நாற்றங்கால் விட்டு, அதில் 40 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும். இப்படிச் செய்யும்போது, 80 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும். இந்த முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு ஒரு கிலோ விதை இருந்தால் போதும். ஆனால், நேரடியாக விதை வெங்காயத்தை விதைக்கும் போது, ஏக்கருக்கு அதிகபட்சம் ஒரு டன் அளவுக்கு விதை தேவைப்படும். தற்போதைய நிலவரப்படி கிலோ 40 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். அதேசமயம், வெங்காய விதைகளின் விலை ஒரு கிலோ
4 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே!

எங்கள் துறையின் மூலம் வெங்காய விதைகளை விற்பனை செய்கிறோம். விதைவெங்காயம் விற்பனை செய்யும் விவசாயிகளிடம் நாங்கள் விதைகளையும் விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். விதைவெங்காயம் பற்றி கூடுதல் விவரங்கள்அறிந்துகொள்ள திருச்சியில் உள்ள மகளிர் தோட்டக்கலைக் கல்லூரியில் உள்ள காய்கறித்துறையை அணுகலாம்.

தொடர்புக்கு,
தொலைபேசி: 0431-2918033/2918034

‘‘எங்கள் பகுதியில் மயில் தொல்லை அதிகமாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு சொல்லுங்கள்?’’

கே.கண்ணகி, விராலிமலை.

திருச்சியில் உள்ள ‘குடும்பம்’ தொண்டு நிறுவனத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் பதில் சொல்கிறார்.

“இயற்கையாகவே திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்கள் அதிக அளவில் வசித்து வருகின்றன.  குறிப்பாக விராலிமலைப் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை அதிகம்தான். மயில்கள் மட்டுமல்ல பல இடங்களில் குரங்குகளும் வயல்வெளிகளில் நடமாடி, விவசாயிகளின் பயிர்களுக்குச் சேதத்தை உண்டு பண்ணுகின்றன.

இந்தப் பறவைகள் மற்றும் விலங்குகளுக்குத் தேவையான உணவு, காடுகளிலேயே கிடைத்ததால், அவையெல்லாம் வயல்வெளிகளுக்கு வரவில்லை. காடுகளில் வன விலங்குகளுக்கு உணவு இல்லாமல் போனதால் அவை உணவுக்காக விவசாய நிலங்களுக்கு வருகின்றன.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் மயில்களை விரட்ட ஒலி எழுப்புவது, ஒலிநாடாக்களை வயலில் சுற்றி கட்டி வைப்பது ஆகியவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஒலிநாடாக்கள் காற்றில் அசையும்போது ஒலி எழுப்பும். இதற்கு மயில்கள் பயந்துகொண்டு வருவதில்லை  சில பகுதிகளில் மீன் அமீனோ அமிலத்தை பயிர்களில் தெளித்துவிடுகிறார்கள். மீன் அமிலத்தின் வாசம் உள்ளவரை மயில்கள் வராது. வாசம் போய் விட்டால், மீண்டும் மயில்கள் வரத்தொடங்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்