பஞ்சகவ்யா - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெற்றி விவசாயிகளின் அசத்தல் அனுபவத் தொடர்பட்டணங்களுக்குப் பயணிக்கும் பஞ்சகவ்யா... மாதம் `30 ஆயிரம் வருமானம்!ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி

ஞ்சகவ்யா உருவான விதம் ஆரம்ப காலத்தில் அதைப் பயன்படுத்தியவர்கள், பரவலாக விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தவர்கள் குறித்து கடந்த இதழ்களில் பார்த்தோம். அந்த வரிசையில் இந்த இதழில், தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார், கொடுமுடி அருகில் உள்ள முத்தூர் பகுதியைச் சேர்ந்த ‘முன்னோடி இயற்கை விவசாயி’ புரவிமுத்து என்கிற முத்துசாமி.

பதினைந்துக்கும் மேற்பட்ட நாட்டு மாடுகளை தனது பண்ணையில் வளர்த்து வருகிறார், முத்துசாமி. தன் மனைவி ஈஸ்வரி சகிதம் பஞ்சகவ்யா தயாரிப்பில் இருந்தவரிடம் பேசினோம். “புரவிப்பாளையம் கிராமம்தான் என்னோட சொந்த ஊர். காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துல, நெல், கரும்பு, மஞ்சள்னு முப்போகம் வெளைச்சல் எடுக்கிற நஞ்சைக்காட்டு விவசாயி. ஆரம்பத்துல எல்லாரையும் போல மூட்டைக்கணக்கில் உரத்தையும், லிட்டர் கணக்கில் பூச்சிக்கொல்லியையும் மண்ணுல கொட்டுன விவசாயிதான் நானும். ஆனா, பதினெட்டே நாளில் என்னை இயற்கை விவசாயத்துக்கு மாற வெச்சது பஞ்சகவ்யாதாங்க” என்று பீடிகை போட்ட முத்துசாமி, தான் தயாரித்த பஞ்சகவ்யா கரைசலை மண்பானையில் ஊற்றி வைத்து விட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

பாம்புக் கடி... பஞ்சகவ்யா!

“2003-ம் வருஷம்னு நெனைக்கிறேன். ஒரு ராத்திரி வேளை, கடலைக்காட்டுக்கு பாசனம் செஞ்சிக்கிட்டு இருந்தேன். மடை திருப்புறதுலயே கவனமா இருந்த நான் வரப்பில் படுத்துக்கிடந்த பாம்பை கவனிக்காம மிதிச்சிட்டேன். கால் மணிக்கட்டுப் பக்கத்துல பட்டுனு ஒரு கடி கடிச்சிடுச்சு. பச்சை மிளகாயக் கடிச்ச மாதிரி ‘சுர்’னு வலி மண்டைக்கு ஏறுது. என்னை மாட்டு வண்டியில ஏத்திக்கிட்டுப் போய், கொடுமுடி டாக்டர் நடராஜன் ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க.

முதலுதவி செஞ்ச டாக்டர், ‘தாமதிக்காம கொண்டுவந்துட்டீங்க. இல்லைனா, நிலைமை மோசமாகியிருக்கும். கொஞ்சநாள் ஆஸ்பத்திரியிலேயே இருக்க வேண்டியிருக்கும்’னு சொன்னார்.

18 நாள் அங்கேயே தங்க வெச்சு வைத்தியம் பார்த்தாரு. அப்ப அவரோட ரொம்ப நேரம் பேசக்கூடிய வாய்ப்பு கிடைச்சது. நாட்டு நடப்பு, உலக நடப்புனு பல விஷயங்கள் பேசுவோம். அப்படி பேசும் போதுதான் பஞ்சகவ்யா கரைசல் குறித்த பேச்சும் வந்தது. குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பும் போது, 5 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை அன்பளிப்பா கொடுத்தார். அதைத் தயாரிக்கும் முறைகளையும் சொல்லிக் கொடுத்து  அனுப்பினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்