“விலை இருக்கு... ஆனா, விதை இல்லை...”

மன உளைச்சலில் உளுந்து விவசாயிகள்! கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன், ம.அரவிந்த்

*உளுந்து கொள்முதல் விலை 98 ரூபாய்

*தனியார் விதை உளுந்து 180 ரூபாய்

*வேளாண் துறையில் 125 ரூபாய்

டெல்டா மாவட்டங்களில் மார்கழி, தைப் பட்டங்களில் நெல் அறுவடைக்குப் பிறகு, உளுந்து சாகுபடி செய்வது வழக்கம். உளுந்து விலை வீழ்ச்சியால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடிப் பரப்பு குறைந்து வந்த நிலையில்... கடந்த ஆண்டு இறுதியில், உளுந்து விலை உச்சத்துக்குச் சென்றது. இதனால், மகிழ்ந்த விவசாயிகள், கடந்த மார்கழி, தைப் பட்டங்களில் அதிகளவில் உளுந்து விதைத்துள்ளனர். அவை தற்போது அறுவடையாகிக் கொண்டிருக்கிறது. அடுத்து சித்திரைப் பட்டத்திலும் உளுந்து விதைக்க பலர் தயாராகி வருகிறார்கள். ஆனால், விதை உளுந்துக்கு டெல்டா மாவட்டங்களில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தேவை 60 கிலோ... கிடைத்தது 20 கிலோ!

‘இந்தத் தட்டுப்பாட்டுக்கு வேளாண் துறையின் அலட்சியம்தான் காரணம்’ என்று குற்றம்சாட்டுகிறார்கள், விவசாயிகள்.

இதுகுறித்துப் பேசிய தஞ்சாவூர் மாவட்டம், ஆர்.சுத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகர், “ஒவ்வொரு வருஷமும் மார்கழி கடைசியில மூணு ஏக்கர் நிலத்துல உளுந்து போடுவோம். போன வருஷம் கிலோ 55 ரூபாய்னுதான் விற்பனையாச்சு. அதனால, ஒரு ஏக்கர்ல மட்டும்தான் உளுந்து போட்டோம். ஆனா, கடந்த ஏழெட்டு மாசமா வெளிமார்க்கெட்ல ஒரு கிலோ உளுந்து 180 ரூபாய்ல இருந்து 200 ரூபாய் வரை விற்பனையானது. அதனால, கண்டிப்பா நல்ல விலை கிடைக்கும்னு எதிர்பார்த்து... ரெண்டு ஏக்கர்ல உளுந்து போட்டோம். ஏக்கருக்கு 8 குவிண்டால் மகசூல் கிடைச்சது.

ஒரு கிலோ 98 ரூபாய்னு விற்பனையாச்சு. அதனால சித்திரைப்பட்டத்துல 6 ஏக்கர்ல உளுந்து போடலாம்னு முடிவு பண்ணி விதை வாங்கப்போனா, விதை கிடைக்கலை. வேளாண் விரிவாக்க மையத்துல 20 கிலோதான் கிடைச்சது. எங்களுக்கு 60 கிலோ விதை தேவை. வேளாண் விரிவாக்க மையங்கள்ல முறையா கொள்முதல் செய்து வைக்காததால விதைக்கு விவசாயிங்க அல்லாடிக்கிட்டு இருக்கோம்” என்றார்.

தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச்செயலாளர் சுகுமாறன், “தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் இந்த மூணு மாவட்டங்கள்லயும் மார்கழி, தைப்பட்டத்துல கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஹெக்டேருக்கு அதிகமான பரப்பளவுல உளுந்து சாகுபடி நடக்கும். கொஞ்ச வருஷமா ஆந்திராவில் இருந்து உளுந்து வர்றதால இங்க விலை கிடைக்கலை. ஆனா, எள்ளுக்கு விலை கிடைச்சது. அதனால, நிறைய பேர் உளுந்தை விட்டுட்டு எள்ளுக்கு மாறினாங்க. இந்த வருஷம் எள்ளுக்கு விலையில்லை.
ஆந்திரா வரத்து குறைஞ்சதால உள்ளூர் உளுந்துக்கு நல்ல விலை கிடைக்குது. அதனால, சித்திரைப் பட்டத்துலயும் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வத்தோடு இருக்காங்க. ஆனா, வேளாண் விரிவாக்க மையங்கள்ல விதை தட்டுப்பாடா இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்