கரும்பு விதைப்பெட்டி... செலவு குறையுது... மகசூல் கூடுது!

தொழில்நுட்பம்ஆர்.குமரேசன், படங்கள்: எஸ். சாய் தர்மராஜ்

ரும்பு விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்னை... டன் கணக்கிலான விதைக்கரணைகளை நடவு வயலுக்கு எடுத்துச் செல்வதுதான். கரணைகளை வயலில் கொட்டி, அதை கூடைகளிலோ அல்லது பைகளிலோ அள்ளிச் செல்லும் போது, கரணைகளில் பருக்கள் சேதாரமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்பிரச்னைக்கு தீர்வு சொல்லும் விதமாக...  பிரத்யேகமாக ஒரு பெட்டியை வடிவமைத்து இருக்கிறார், சிவகங்கை மாவட்டம், திருமலை என்ற ஊரைச் சேர்ந்த அழகுசுந்தரம்.

“பெரும்பாலான விவசாயிகள், விதைக்கரணையை நேரடியா வயலுக்கு எடுத்துட்டுப் போய்தான் நடவு செய்வாங்க. அதுக்காக விதைக்கரணைகளை வெட்டி, ஒர் இடத்துல குவிச்சு வெப்பாங்க. அங்க இருந்து கூடையில அள்ளிக்கிட்டுப் போய் விதைப்பாங்க. இப்படி கொட்டி வெக்கிறப்போ, கரணைகள் வெயில்ல, மழையில பாதிக்கப்படுற வாய்ப்பும் உண்டு. கூடையில எடுத்துக்கிட்டுப் போகும்போது பருக்கள் உடைஞ்சிடும். இப்படி உடைஞ்சா கரும்பு முளைச்சு வராது. இதுக்கெல்லாம் தீர்வு சொல்ற வகையிலதான் இந்த விதைப்பெட்டியை வடிவமைச்சிருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த அழகுசுந்தரம் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்